தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு
உலகளவில், இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை மேலும் பலப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 16 அன்று 'தேசிய ஸ்டார்ட்அப் தின'மாக அனுசரிக்கப்படுகிறது. இது போன்ற ஸ்டார்ட்அப் முயற்சிகள், பல துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் என்று, கடந்த 2021 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், ஜனவரி 10 முதல் 16 வரை ஒரு வாரம் முழுவதையும் தேசிய ஸ்டார்ட்அப் வாரமாக அறிவித்துள்ளது. வருடா வருடம், அது தொடர்பாக கருதரங்கமும் நடைபெறும். அதில் அரசு அதிகாரிகள், இன்குபேட்டர்கள், கார்ப்பரேட்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்ற ஸ்டார்ட்அப் அமைப்பில் தொடர்புடைய பங்குதாரர்கள் பங்குபெறுவர்கள். அந்தாண்டின் சிறந்த ஸ்டார்ட்அப்பிற்கு விருதுகளும் வழங்கப்படும்.