2027-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மகுடம் சூடிய இந்தியா: சிறப்பம்சங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பயண இதழான 'டிராவல் + லீஷர்' மிகச் சிறந்த சுற்றுலா தளம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2027 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இந்தியா தேர்வாகியுள்ளது. இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளும் சர்வதேசப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளன. மேலும் பல்வேறு வகையான சுற்றுலா அனுபவங்களை இந்தியா ஒரே இடத்தில் வழங்குகிறது. இதன் மூலம் உலகளாவிய சுற்றுலாத் துறையில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பன்முகத்தன்மை
இமயமலை முதல் கேரளக் கடற்கரைகள் வரையிலான இயற்கைப் பன்முகத்தன்மை
ஒரு சுற்றுலா தலமாக இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் இயற்கை பன்முகத்தன்மையே ஆகும்.
வடக்கே பனி படர்ந்த இமயமலைச் சிகரங்கள் பயணிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன.
தெற்கே கோவா மற்றும் கேரளாவின் வெப்பமண்டலக் கடற்கரைகள் அமைதியான சூழலை வழங்குகின்றன.
மேலும் துடிப்பான பெருநகரங்கள் மற்றும் அமைதியான மலைவாசஸ்தலங்கள் நாடு முழுவதும் நிறைந்துள்ளன.
அடர்ந்த வனவிலங்கு சரணாலயங்களும் பாலைவனப் பகுதிகளும் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன.
இதனால் அனைத்து வகை பயணிகளுக்கும் இந்தியா சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.
யோகா
வரலாற்றுச் சின்னங்கள், ஆன்மீக சுற்றுலா மற்றும் யோகா-ஆயுர்வேத ஈர்ப்பு
ஆக்ராவின் தாஜ்மஹால் மற்றும் கஜுராஹோ கோயில்கள் இந்தியாவின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றுகின்றன.
ராஜஸ்தான் கோட்டைகளும் அரண்மனைகளும் ஹம்பியின் வரலாற்று சின்னங்களும் உலக பயணிகளைக் கவர்கின்றன.
வாரணாசி, பூரி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ் மற்றும் அமிர்தசரஸ் ஆகியவை ஆன்மீக சுற்றுலாவின் மையங்களாகத் திகழ்கின்றன.
குறிப்பாக யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது.
இதனால் நலவாழ்வு மற்றும் தியானத்தைத் தேடும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.
உணவு வகைகள்
பிராந்திய உணவு வகைகள், வனவிலங்கு சஃபாரி மற்றும் மேம்படும் உள்கட்டமைப்பு
இந்திய பயண அனுபவத்தின் மற்றொரு முக்கிய அடையாளம் அதன் பாரம்பரிய உணவுக் கலாச்சாரமாகும்.
பஞ்சாபி உணவுகள், குஜராத்தி தாலி மற்றும் தென்னிந்திய உணவுகள் தனித்துவமான சுவையை வழங்குகின்றன.
வங்காள இனிப்புகளும் பாரம்பரிய கடலோர உணவுகளும் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.
இவற்றுடன் வனவிலங்கு சஃபாரி, சாகச விளையாட்டுகள் மற்றும் ஆடம்பர விருந்தோம்பலும் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
வேகமாக மேம்பட்டு வரும் போக்குவரத்து உள்கட்டமைப்பும் 2027-ல் இந்தியாவை முதன்மைத் தேர்வாக மாற்றியுள்ளது.