அசைவத்திற்கு மாற்றான சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் செய்வது எப்படி?
ஒரு உணவுப் பொருளை பெரிய துண்டுகளாக நறுக்கி செய்யும் சமையல் முறைக்கு சாப்ஸ் எனப் பெயர். இது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ சாப்ஸ் உணவு வகைகளை செய்ய முடியாது. எனவே, சைவ உணவுப் பொருளான சேனைக் கிழங்கு சாப்ஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு - 250 கிராம் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அதை தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு எழுமிச்சை சாறு - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
சேனைக்கிழங்கு சாப்ஸ்: செய்முறை
சேனைக்கிழங்கை சுத்தம் செய்து, பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அந்த சேனைக்கிழங்குடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை குக்கரில் போட்டு 2 விசில்கள் வரை வேக விட்டு தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வேக வைத்த சேனைக்கிழங்கு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அனைத்து பக்கமும் நன்கு வறுபடும்படி வறுக்கவும். பின்னர், அதனை கடாயில் இருந்து எடுத்துவிட்டு, அதன் மேல் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து விட்டு, சிறதளவு கொத்தமல்லி தழையை மேலே தூவினால் சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் ரெடி.