
வீக்-எண்டில் குழந்தைகளை கவர மொறுமொறுப்பான கார்ன் கபாப்
செய்தி முன்னோட்டம்
பள்ளி குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு திரும்ப சென்ற நேரம்.
வார இறுதி நாட்களில் என்ன செய்வது என்ற குழப்பம். புரட்டாசி மாதம் என்பதால், வீட்டில் அசைவம் செய்ய முடியாது என்ற யோசனை. கவலை வேண்டாம்!
உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகளை, ருசியாகவும், எளிதாகவும் செய்ய நாங்கள் உங்களுக்கு பல ரெசிபிக்களை வழங்கி வருகிறோம்.
இன்று மொறுமொறுப்பான, சத்தான கார்ன் கபாப் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
card 2
தேவையான பொருட்கள்:
வேகவைத்து, உதிர்த்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப்
துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்
வேர்க்கடலைப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 6
புதினா தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் ர
ஸ்க் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
ரெட் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
card 3
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, கார்ன் போட்டு, புதினா, ரெட் சில்லி சாஸ் சேர்த்து, வேர்க்கடலைப்பொடி தூவிப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை போல தட்டி, விருப்ப வடிவ பிஸ்கட் கட்டரால் அழுத்தி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.
எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
ஒரு பானில் (Pan) கொஞ்சம் எண்ணெய்விட்டு சூடாக்கி, இந்த கார்ன் கபாபை அதில் போட்டு இருபுறமும் வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுத்து, அதன் ஒவ்வொன்றின் மேலும் முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரித்து சாஸ் உடன் பரிமாறவும்.