NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இதிலும் போலியா? உருளைக் கிழங்கு வாங்கும் முன் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
    அடுத்த செய்திக் கட்டுரை
    இதிலும் போலியா? உருளைக் கிழங்கு வாங்கும் முன் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
    போலி உருளைக் கிழங்கை கண்டுபிடிக்கும் முறை

    இதிலும் போலியா? உருளைக் கிழங்கு வாங்கும் முன் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 18, 2024
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சில ரூபாயில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக மக்கள் தங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக, கலப்பட பொருட்களின் வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக பண்டிகைகள் வரும்போது உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகம் நடக்கிறது.

    தற்போது உருளைக்கிழங்கிலும் கலப்படம் செய்யப்படும் சம்பவங்கள் இந்தியாவில் நடக்க ஆரம்பித்துள்ளது.

    சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் நடந்த சோதனையில், ஏராளமான போலி உருளைக்கிழங்கு பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த உருளைக்கிழங்கு புதியதாக தோற்றமளிக்க பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதனால் உருளைக்கிழங்கை புதியது என நினைத்து தவறுதலாக மக்கள் வாங்குகின்றனர். போலி உருளைக்கிழங்கு என்பதை கண்டறிவது எப்படி என இதில் தெரிந்து கொள்ளலாம்.

    கண்டறிதல்

    போலி உருளைக்கிழங்கை கண்டறியும் முறை

    உண்மையான மற்றும் போலி உருளைக்கிழங்குகளை அவற்றின் வாசனையால் அடையாளம் காணலாம். உருளைக்கிழங்கு உண்மையானதாக இருந்தால், அது இயற்கையான வாசனையுடன் இருக்கும்.

    அதேசமயம், போலி உருளைக்கிழங்கு இரசாயன மணம் கொண்டது மற்றும் அவற்றின் நிறம் கையில் அடையாளத்தை விட்டுச்செல்கிறது.

    உருளைக்கிழங்கை வெட்டுவதன் மூலம் சரிபார்க்கலாம். இது உண்மையான உருளைக்கிழங்கு என்றால், அது உள்ளேயும் வெளியேயும் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் இருக்கும். அதேசமயம் ஒரு போலி உருளைக்கிழங்கின் நிறம் உள்ளே இருந்து வித்தியாசமாக இருக்கும்.

    உருளைக்கிழங்கில் இருந்து மண்ணை அகற்றிய பிறகு ஒரு முறை சரிபார்க்கவும். உருளைக்கிழங்கை தண்ணீரில் நனைத்து சரிபார்ப்பது மற்றொரு முறையாகும்.

    போலி உருளைக்கிழங்கு தண்ணீரில் மிதக்கும். அதேசமயம் உண்மையான மற்றும் புதிய உருளைக்கிழங்கு தண்ணீரில் மூழ்கும்.

    ஆரோக்கியம்

    போலி உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது

    போலி உருளைக்கிழங்கை தண்ணீரில் முக்கும்போது அதில் உள்ள அழுக்குகள் தண்ணீரில் கரைந்துவிடும். அதேசமயம் உண்மையான புதிய உருளைக்கிழங்கில் உள்ள அழுக்கு சில நேரங்களில் தேய்த்த பிறகும் சுத்தம் ஆகாது.

    மேலும் அதன் தோலும் மிகவும் மெல்லியதாக இருக்கும். இது அழுக்குகளை அகற்றும் போது வெளியேறத் தொடங்குகிறது.

    மருத்துவர்களின் கூற்றுப்படி, போலி உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இதில் சேர்க்கப்படும் நிறங்கள் மற்றும் ரசாயனங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    இத்தகைய காய்கறிகளை நீண்ட காலம் பயன்படுத்துவதால் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

    இத்தகைய உருளைக்கிழங்கு காய்கறிகளை சாப்பிடுவதால் வயிறு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் பசியின்மை ஏற்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்
    ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கியமான உணவுகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உடல் ஆரோக்கியம்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் உடல் நலம்
    வெறும் வயிற்றில் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் உடல் நலம்
    உலக  நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர் நீரிழிவு நோய்
    அதிகம் அறியப்படாத இந்திய மசாலாப் பொருட்களின் மருத்துவ ரகசியங்கள்  சமையல் குறிப்பு

    உடல் நலம்

    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம் உத்தரகாண்ட்
    சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது? பீகார்
    72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் டயட்
    டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மீதான சிறுநீரகக் திருட்டு குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு விசாரணை டெல்லி

    ஆரோக்கியமான உணவு

    பல நோய்களுக்கு அருமருந்தாகும் முலாம்பழம் உடல் ஆரோக்கியம்
    உங்களுக்கு சுகர் இருக்கிறதா? தவறாமல் இந்த உணவுகளை உண்ணுங்கள் நீரிழிவு நோய்
    உங்கள் வெல்லம் தூய்மையானதா என்பதை அறிய சில குறிப்புகள் பொங்கல்
    தினசரி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? உணவு குறிப்புகள்

    ஆரோக்கியமான உணவுகள்

    எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் உணவு பிரியர்கள்
    தேநீர் மற்றும் காபி அடிக்ஷனை தடுக்க மாற்று பானங்கள் இதோ ஆரோக்கியம்
    கீரையை விட அதிக இரும்பு சத்து உள்ள உணவுகள் இவைதான் உணவு குறிப்புகள்
    நீங்கள் ஏன் அடிக்கடி சாலட் சாப்பிட வேண்டும் தெரியுமா? ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025