
உங்கள் பணத்தை திருப்பித் தருமாறு உங்கள் நண்பரிடம் எவ்வாறு கேட்கலாம்?
செய்தி முன்னோட்டம்
கடன் கொடுத்த நண்பரிடம் பணத்தை கேட்பதை போன்ற மனஅழுத்தம் தரக்கூடிய விஷயம் வேறெதுவும் இருக்காது.
இதனால் உறவில் விரிசல் விழுமோ என்ற அச்சமும் தலைதூக்கும்.
ஆனால், கொடுத்த பணத்தை திரும்ப பெற, அவர்களை எவ்வாறு கேட்கலாம் என பல யோசைனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
மோதலைத் தவிர்க்கவும்: உங்கள் நண்பரிடம், பணத்தைத் திரும்பக் கேட்கும் போது, எதுவும் முரண்படாக பேசாதீர்கள். மோதலில் ஈடுபடுவது உங்கள் பணம் மற்றும் உங்கள் நட்பு இரண்டிற்கும் ஆபத்து. மாறாக, நுட்பமாக உணர்த்தவும்.
அவசர உணர்வை உருவாக்குங்கள்: பொய்யாகவே இருந்தாலும், ஒரு அவசர நிலை உருவானது போல கூறலாம். பில் கட்டவேண்டும், பண பரிவர்த்தனை செய்ய வேண்டி உள்ளது போன்ற காரணங்களை கூறலாம்.
கடன்
நிதிநிலைமையை எடுத்து கூறலாம்
அடுத்த சந்திப்பின் போது, அவர்கள் பணம் செலுத்தட்டும்: நீங்கள் அவர்களுக்குக் கடனாகக் கொடுத்த தொகையை, உணவின் மூலம் திரும்பப் பெற முடியுமானால், இதை சொல்லலாம். உங்கள் உணவிற்கான பில்லையும் அவரை கட்ட சொல்லி, உங்கள் கடனை கழித்துக்கொள்ளலாம்.
சில செயல்பாடுகளை நிராகரிக்கவும்: மேற்சொன்ன யுக்தி செயல்படவில்லை என்றால், அவர்களிடம் உங்கள் நிதி நிலைமையை அவ்வப்போது எடுத்துக்கூறி பச்சாதாபத்தை உண்டாகலாம். வெளியே வர அழைக்கும் போது உங்கள் நிதிநிலைமையை கூறலாம்.
அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குங்கள்: சில சமயங்களில், பணத்தை விட நட்பு மதிப்புமிக்கதாக இருக்கும். எனவே, உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியிருந்தால், திருப்பிச் செலுத்துவதற்கான ஆப்ஷன்களை அவர்களுக்கு வழங்குங்கள். அடிக்கடி நினைவூட்டலாம்.இதன் மூலம் அவர்கள் அதற்கேற்ப திட்டமிடலாம்.