Page Loader
இனி ஹார்லிக்ஸ் ஒரு 'ஆரோக்கிய பானம்' இல்லை: காரணம் என்ன?

இனி ஹார்லிக்ஸ் ஒரு 'ஆரோக்கிய பானம்' இல்லை: காரணம் என்ன?

எழுதியவர் Sindhuja SM
Apr 25, 2024
04:36 pm

செய்தி முன்னோட்டம்

ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளைக் விற்று வரும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்(HUL), அதன் 'ஆரோக்கிய பானங்கள்' பிரிவுக்கு மறுபெயரிட்டுள்ளது. இத்தனை நாள் 'ஆரோக்கிய பானங்கள்' என்ற குறியீட்டு பெயருடன் விர்க்கப்பட்டு வந்த ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் இனி 'ஊட்டச்சத்து பானங்கள்'(FND) என விற்கப்படும் என்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் அறிவித்துள்ளது. ஹார்லிக்ஸில் இருந்த 'ஆரோக்கியம்' என்ற லேபிளும் கைவிடபட்டுள்ளது. போர்ன்விடா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் 'ஹெல்த் டிரிங்க்ஸ்' என்ற வகையிலிருந்து அகற்றுமாறு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதனை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா 

ஆரோக்கிய நலன்களை வழங்கும் மது அல்லாத பானங்கள் 

ஏப்ரல் 24 அன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​HUL இன் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ் திவாரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த மாற்றம் அந்த பானங்களின் துல்லியமான மற்றும் வெளிப்படையான விளக்கத்தை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார். புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சத்துக்களை 'ஊட்டச்சத்து பானங்கள்' வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாவரம், விலங்கு அல்லது நுண்ணுயிர் மூலத்திலிருந்து பெறப்படும் சத்துக்களை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கிய நலன்களை வழங்கும் மது அல்லாத பானமாக FND இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.