பல்வலி, பற்கூச்சத்திலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்
செய்தி முன்னோட்டம்
பொதுவாக பற்கள் தேய்மானம் அடைந்தாலோ, ஈறுகளில் ஏற்படும் பிரச்சினைகளினால், பற்கூச்சம், ஈறுகள் வீக்கம் உண்டாகும். சில நேரங்களில் அது உங்கள் வாழ்க்கை முறையினால் கூட ஏற்படும்.
அதனால் நீங்கள் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ அல்லது இனிப்பானதாகவோ ஏதாவது உட்கொள்ளும்போது, ஒருவித கூர்மையான உணர்வோ, வலியோ ஏற்படும்.
ஈறு அழற்சி மற்றும் அதிகமாக பல் துலக்குதல் போன்றவற்றாலும் பற்களில் உணர்திறன் ஏற்படலாம்.
அதற்கு நிவாரணம்தர, மருத்துவர்கள், பிரத்யேகமான டூத்பேஸ்ட் மற்றும் Ointment பரிந்துரைப்பார்கள். இருப்பினும் சில வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.
கற்றாழை: அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிரம்பிய கற்றாழை, உணர்திறன் வாய்ந்த பற்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தப்படுத்தி, வலி மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் தரும்.
card 2
உணர்திறன் மற்றும் வலியைத் தணிக்கும் பூண்டு
பூண்டு: பூண்டில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.இதில் உள்ள மூல பொருட்களான ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், ஸ்டெராய்டுகள் போன்றவை பற்களின் மேற்பூச்சான Enamel-ஐ பாதுகாக்க உதவுகின்றன.
உப்பு நீர்: பொதுவாக அனைத்து வலிகளுக்கும் உப்பு கலந்த நீரை பயன்படுத்துவதால், உடனடி நிவாரணம் கிடைக்கும். காரணம், ஆண்டிசெப்டிக் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்த உப்பு நீர், உணர்திறன் வாய்ந்த பற்களால் ஏற்படும், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். அதோடு, பற்களில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றையும் நீக்கும்.
தேன்: ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஈறுகளில் வீக்கம், வலி மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் குறைக்கவும் தேனைப் பயன்படுத்தலாம்.