Page Loader
Panic attack-ஆல் அவதிப்படுகிறீர்களா? அதை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்
Panic attacks-ஆல் அவதிப்படுகிறீர்களா?

Panic attack-ஆல் அவதிப்படுகிறீர்களா? அதை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2023
06:13 pm

செய்தி முன்னோட்டம்

Panic attack என்பது கவலை மற்றும் பயத்தின் திடீர் வெளிப்பாடாகும். பொதுவாக இந்த Panic அட்டாக், மன அழுத்தம், அதிர்ச்சிகரமான நிகழ்வு, புகைபிடித்தல் அல்லது அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் ஆகியவற்றால் ஏற்படக்கூடும். Panic அட்டாக்கின் பொதுவான அறிகுறிகளாக, குமட்டல், நடுக்கம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, வியர்வை, தலைச்சுற்றல் போன்றவை இருக்கும். பெரும்பாலான நேரத்தில், இந்த வகை பய உணர்வு, 5 முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த நிலையை நீங்கள் சமாளிக்க, நிபுணர்கள் தரும் சில டிப்ஸ்: மூச்சு பயிற்சி செய்யுங்கள்: Panic அட்டாக்கின் போது, உங்கள் சுவாசம் வேகமாக இருக்கும். இதை தவிர்க்க, ஆழமாக, மெதுவாக சுவாசிக்கவும். இது, உங்களை அமைதிப்படுத்தவும், நிம்மதியாக உணரவும் உதவும்.

ஆரோக்கியம்

5-4-3-2-1 முறையை பயன்படுத்தி, உங்கள் ஐம்புலன்களையும் திசைமாற்றுங்கள்

Guided imagery technique: ஆராய்ச்சியின்படி, இயற்கையில் நேரத்தை செலவிடுவதும், இயற்கையை காட்சிப்படுத்துவதும், கவலையை போக்க உதவும். ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு, கடற்கரையோரம் அமர்ந்திருப்பதையோ அல்லது மலைகளில் புதிய காற்றை சுவாசிப்பதையோ கற்பனை செய்து பாருங்கள். லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தவும்: ஆய்வின்படி, லாவெண்டர் எண்ணெய்க்கு, மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் குணாதிசயம் உள்ளது. இது சீர்குலைந்த தூக்கம் மற்றும் அமைதியின்மைக்கு சிகிச்சையளிக்கிறது. இந்த எண்ணெயை, உங்கள் மணிக்கட்டுகளிலும், காதுகளுக்குப் பின்னாலும், நீங்கள் நுகரும் இடத்தில் தடவி கொள்ளுங்கள். 5-4-3-2-1 முறையை முயற்சிக்கவும்: ஐந்து வெவ்வேறு பொருட்களைப் பாருங்கள், நான்கு வெவ்வேறு ஒலிகளைக் கேளுங்கள், மூன்று பொருட்களைத் தொடவும். அடுத்து, இரண்டு வெவ்வேறு வாசனைகளை அடையாளம் கண்டு, கடைசியாக எதையாவது சுவைக்கவும்.