அன்னையர் தினம் 2023: அம்மாவின் உடல் ஆரோக்கியத்திற்கு சில பரிசு பொருட்கள்
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும், மே இரண்டாவது ஞாயிற்று கிழமை, அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, நாளை, மே மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அந்த நாளில் உங்கள் தாயாருக்கு என்ன பரிசு அளிக்கலாம் என குழம்பி உள்ளீர்களா?
இந்த முறை, அவர்கள் உடல்நலனை பாதுகாக்க சில பரிசு பொருட்களை வழங்கலாமே.
அவர்களின் தூக்கத்தை மானிட்டர் செய்ய, ஸ்லீப் மானிட்டர், ரத்த அழுத்தத்தை கண்கணிக்க பிபி மெஷின் என சில உபயோகமான பொருட்களை வாங்கி தரலாம். உங்களுக்காக சில ஐடியாக்கள்:
சுகர்-பிரீ பிஸ்கட்ஸ்: நீரழிவு நோய் உள்ள அம்மாவிற்கு, சுகர்பிரீ ஸ்வீட்ஸ் மற்றும் பிஸ்கட்ஸ் கிடைக்கிறது. ஆரோக்கியத்தினை காக்க இந்த இயற்கையான சுவை கூடிய ஸ்னாக்ஸ் வாங்கி தரலாம்.
card 2
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சில பரிசு பொருட்கள்
ஃபிட்னெஸ் ட்ராக்கர்: தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதை கண்காணிக்க இந்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பரிசளிக்கலாம்.
ஹெல்த்தி சமையல் புத்தகங்கள்: அம்மாவிற்கு சமையலில் விருப்பம் என்றால் ஆரோக்கிய சமயல் குறிப்புக்கள் அடங்கிய புத்தகத்தை பரிசளிக்கலாம்.
ஸ்பா டே: ஆண்டு முழுவதும் வேலை செய்து களைத்த அன்னைக்கு, ஒரு சூப்பர் ஸ்பா டே ஏற்பாடு செய்யலாம். உடல் அசதி போக, புத்துணர்ச்சி பெற இதை ட்ரை செய்யலாம்.
க்ளுகோஸ் மானிட்டர்: உடலில் உள்ள சர்க்கரை அளவை கண்காணிக்க இந்த சாதனத்தை பரிசளிக்கலாம்.
தனிப்பட்ட வாட்டர் பாட்டில்: உடலில் நீரேற்றத்தை உறுதி செய்ய, அம்மாவிற்கென பிரத்யேக வாட்டர் பாட்டில் வாங்கி தரலாம். அதன் மூலம் தண்ணீர் பருகுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தலாம்