Loading...
ஜூலை 2028 முதல் பால், தயிர், பன்னீர் பாக்கெட்டுகளில் புதிய நீல-வெள்ளை லோகோ கட்டாயம்: FSSAI அறிவிப்பு
ஜூலை 2028 முதல் பால், தயிர், பன்னீர் பாக்கெட்டுகளில் புதிய நீல-வெள்ளை லோகோ கட்டாயம்

ஜூலை 2028 முதல் பால், தயிர், பன்னீர் பாக்கெட்டுகளில் புதிய நீல-வெள்ளை லோகோ கட்டாயம்: FSSAI அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2026
07:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் பாக்கெட்டுகளில் பொதுவான அடையாள சின்னத்தை அச்சிடுவதை கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 9 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் இரண்டாவது திருத்த விதிமுறைகள் 2026-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜூலை 1, 2028 முதல் நாடு முழுவதும் விற்பனையாகும் பால் பொருட்களில் இந்தப் புதிய லோகோ இடம்பெற வேண்டும்.

பாக்கெட் அளவு விதிகள்

நீலச் சதுரத்தில் வெள்ளை நிற பால் துளி வடிவமைப்பு மற்றும் பாக்கெட் அளவு விதிகள்

புதிய சின்னமானது நீல நிற சதுரப் பின்னணியில் வெள்ளை நிற பால் துளி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை பாக்கெட்டின் முன்பக்க பிரதான காட்சிப் பகுதியில் நுகர்வோருக்கு தெளிவாக தெரியும்படி அச்சிட வேண்டும்.

பாக்கெட்டின் பரப்பளவிற்கு ஏற்ப 100 சதுர செ.மீ வரை குறைந்தபட்சம் 6 மி.மீ, 500 சதுர செ.மீ வரை 8 மி.மீ, 2,500 சதுர செ.மீ வரை 12 மி.மீ மற்றும் அதற்கு மேல் 16 மி.மீ அளவில் லோகோ இருக்க வேண்டும்.

பால் பொருட்கள்

தயிர், பன்னீர், வெண்ணெய் மற்றும் சீஸ் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும்

இந்த புதிய விதிமுறை வெறும் திரவ பால் பாக்கெட்டுகளுக்கு மட்டுமின்றி அனைத்து பால் மற்றும் கூட்டு பால் பொருட்களுக்கும் பொருந்தும் என FSSAI அறிவித்துள்ளது.

இதன்படி அன்றாடம் பயன்படுத்தப்படும் தயிர், பன்னீர், வெண்ணெய், சீஸ் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பிற உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளிலும் இந்த சின்னம் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

அனைத்து பால் நிறுவனங்களும் ஜூலை 2028-க்குள் தங்களது பாக்கெட் வடிவமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

நுகர்வோர் கவனிக்க வேண்டியவை

இது தூய்மைக்கான தர சான்றிதழ் அல்ல; நுகர்வோர் கவனிக்க வேண்டிய முக்கியத் தகவல்

பல்வேறு பிராண்டுகளுக்கு இடையே நுகர்வோர் பால் பொருட்களை எளிதாக அடையாளம் காணவும், ஒழுங்குமுறை விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே இந்தச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பால் துளி சின்னம் என்பது கலப்படமற்ற தூய்மைக்கான தனி தர சான்றிதழ் கிடையாது என FSSAI தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே நுகர்வோர் வழக்கம்போல உற்பத்தியாளர் விவரம், மூலப்பொருட்கள், காலாவதி தேதி மற்றும் FSSAI உரிம எண் ஆகியவற்றை சரிபார்த்தே பொருட்களை வாங்க வேண்டும்.

ADVERTISEMENT