வயிற்றுக்கு தீங்கு மற்றும் நோவு விளைவிக்கும் சில உணவுகள்
உணவு தொடர்பான எந்த கவனக்குறைவும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான உணவு உட்கொள்ளலை ஊக்குவிக்கவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கவும் உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. வயிற்றுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் சில உணவுகள் உள்ளன. வறுத்த உணவு: வறுத்த உணவுகள், எண்ணெய் உணவுகளை அதிகமாக உட்கொள்வதை நிறுத்த வேண்டும். இது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் வயிற்று கொழுப்பை அதிகரிக்கும். சர்க்கரை உட்கொள்ளல்: சர்க்கரையை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். வயிற்றில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். நல்ல பாக்டீரியா வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நல்ல பாக்டீரியாவை அழிக்கிறது, இது உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உலக உணவு பாதுகாப்பு தினம்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: அதிக உப்பு, சர்க்கரை அல்லது கொழுப்பு சாப்பிடுவது வயிற்றுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு பூட் பாய்சன் ஏற்பட ஒரு காரணியாக மாறுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் குளிர்பானங்கள், சிப்ஸ், சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம், பேக்கேஜ் செய்யப்பட்ட சூப்கள், சிக்கன் நகெட்ஸ், ஹாட் டாக் மற்றும் ஃப்ரைஸ் ஆகியவை அடங்கும். செயற்கை இனிப்பு: இப்போதெல்லாம் செயற்கை இனிப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இனிப்பு உட்கொள்வதைத் தவிர்ப்பதற்காக மக்கள் செயற்கை இனிப்புகளை உட்கொள்கிறார்கள், ஆனால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். செயற்கை இனிப்பு சில இரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது. இதில் குறைந்த கலோரி அல்லது ஜீரோ கலோரி இருக்கிறது என்றாலும், அதன் நுகர்வு எடை அதிகரிக்க வழிவகுக்காது என முழுமையாக கூற முடியாது.