முடி வளர்ச்சியை தூண்டும் பயோட்டின் நிறைந்த ஐந்து உணவுகள்
உணவு குறிப்புகள்: முடி வளர்ச்சியை தூண்ட பலர் பயோட்டின் சப்ளிமென்ட்டுகளை எடுத்து கொள்கின்றனர். சப்ளிமென்ட்டுகள் இல்லாமல் முடி வளர்ச்சியை தூண்டும் பயோட்டின் நிறைந்த இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்வதும் முடி வளர்ச்சிக்கு சமமாக உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். அது போன்ற உணவுகளை இப்போது பார்க்கலாம். அவகாடோ ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த அவகாடோ பழங்கள், பயோட்டினை அதிகம் கொண்ட ஒரு பழமாகும். இது மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் முடி உதிர்வதையும் தடுக்கிறது. சீனிக்கிழங்கு சாதாரண கிழங்குகளை விட, சீனிக்கிழங்குகள் முடி வளர்ச்சிக்கு நன்கு உதவும் ஒரு உணவாகும். பயோட்டின் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்த சீனிகிழங்குகள், முடி இழைகளை வலுப்படுத்துவதுடன் முடிக்கு இயற்கையான பளபளப்பையும் அளிக்கிறது.
பாதாம்
சாதாரண சிற்றுண்டியாக பலர் பாதாமை உட்கொள்கிறார்கள். எனினும், பாதாம் எண்ணற்ற முடி பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. பயோட்டின், வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளுடன் கூடிய பாதாம், வலுவான மற்றும் பளபளப்பான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அரைக்கீரை அரைக்கீரை தசை வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. பயோட்டின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த அரைக்கீரை, உச்சந்தலையில் ஓடும் இரத்த ஓட்டத்தை எளிதாக்குவதுடன் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. ப்ரோக்கோலி பயோட்டின் மற்றும் வலுவான முடி வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களின் ஆதாரமாக ப்ரோக்கோலி உள்ளது. வாராந்திர உணவில் ப்ரோக்கோலியை சேர்த்தால் முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.