
அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வேறுபாடு அதிகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று போலவே, இந்த மாறுபட்ட வைரஸ் தொற்றும், நுரையீரல் செல்களை பாதிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
நோய் கிருமி, வாய் மற்றும் மூக்கு வழியாக உடலில் நுழைந்து நுரையீரலில் உள்ள அல்வியோலியை எரித்து, ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைத் தடுக்கிறது.
அதனால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ரத்த ஓட்டமும் குறைந்து, நாளடைவில் செயலிழந்து போகும்.
இந்த நோய் தொற்று பாதிப்பு, ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களை அதிகமாக பாதிக்கிறது.
இதை தவிர்க்க, உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தல் தற்போது அவசியமாகிறது.
அதற்கான சில வழிமுறைகள் இதோ:
புகைபிடிப்பதை தவிர்க்கவும்: புகைபிடித்தல் நுரையீரலை பாதிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் ஆரோக்கியம்
எப்போதும் சுகாதாரமாக இருப்பது அவசியம்
மூச்சு பயிற்சி செய்யவும்: ஆழ்ந்த மூச்சு பயிற்சியில் ஈடுபடுங்கள். அதனால், உங்கள் நுரையீரல் செல்கள் விரிவடைகிறது.
காற்று மாசை தவிர்க்கவும்: அதிக புகை, காற்று மாசு நிறைந்த இடங்களை தவிர்க்க வேண்டும். மாசு காற்றை சுவாசிப்பதால், நாள்பட்ட மூச்சு பிரச்சனைகள் ஏற்படும். அது நுரையீரலையும் பாதிக்கும்.
தினசரி உடற்பயிற்சி: தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நுரையீரலும் தனது முழு சக்தியில் வேலை செய்ய துவங்குகிறது.
ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்: உங்கள் தினசரி வழக்கத்தில், ஆரோகியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவும்.
பொது சுகாதாரத்தை கடைபிடிக்கவும்: எப்போதுமே பொது சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம். அதிலும் தற்போது இருக்கும் பெருந்தொற்று காலத்தில் அது அதீத அவசியம்