Page Loader
உலக உடல் பருமன் தினம் 2023: எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த 8 வாழ்க்கை முறை மாற்றங்கள்
இன்று உலக உடல் பருமன் தினம்!

உலக உடல் பருமன் தினம் 2023: எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த 8 வாழ்க்கை முறை மாற்றங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2023
09:37 am

செய்தி முன்னோட்டம்

'உடல் பருமன் தினம்' ஆண்டுதோறும், மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கொண்டாடப்படுகிறது. உடல் பருமன், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவைகளை வரவழைக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடல் பருமனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் கூறும் வாழ்க்கை முறை மாற்றங்கள்: ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவுகள், உடல் பருமனை தடுக்க உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்: பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அதோடு, சிப்ஸ் மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற பொருட்களையும் குறைக்கவும்.

உடல் எடை

இரவு உறக்கம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்

உடற்பயிற்சி செய்யுங்கள்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் பருமனை தடுக்கவும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சிக்கவும். 7 மணிநேரம் உறங்குதல்: இரவு போதிய தூக்கமின்மையும் உடல் எடையை அதிகரிக்கும். தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குங்கள். மன அழுத்தம்: மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்களை அறியாமல் அதிகமாக உண்ண நேரிடும். அதனால் உடல் எடை அதிகரிக்கும். அதனால், மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடவும். நீரேற்றமாக இருங்கள்: ஒரு நாளைக்கு குறைந்தது 8கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இது உங்களை நீரேற்றத்துடனும், பசியை குறைக்கவும் உதவும். இவற்றுடன், உங்கள் உணவை வீட்டில் சமைக்கவும், அளவை குறைத்து உண்ணவும் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.