
கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக்
செய்தி முன்னோட்டம்
எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியென்றால், அந்த முயற்சியின் போது, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், கலோரி.
எடை இழப்பிற்கு முக்கியமாக, உங்கள் கலோரிகளை குறைத்திட வேண்டும். ஆனால், ஆரோகியமான வழியில், கலோரிகளை எவ்வாறு குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கலோரி, என்பது உணவு மற்றும் பானங்களிலிருந்து பெறப்படும் ஆற்றலின் அளவை விவரிக்கும் அளவீட்டு குறியாகும்.
உணவு மற்றும் பானங்கள் மூலம் உட்கொள்ளும் கலோரிகளை விட, உடல் அதிக கலோரிகளை எரிக்கும்போது கலோரி பற்றாக்குறை ஏற்படுகிறது.
உடலில், அதன் தேவைகளை பூர்த்தி செய்ய உணவில் இருந்து போதுமான ஆற்றல் இல்லாதபோது, அந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய, உடல் சேமிக்கப்பட்ட கொழுப்பில் இருந்து ஆற்றலை பெற்றுக் கொள்கிறது.
உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியமான வழியில் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்
உடலின் கொழுப்பு எரிபொருளுக்காகப் பயன்படுத்துவதால், இது காலப்போக்கில் எடை இழப்புக்கு பங்களிக்கும்.
எடை இழப்புக்கு தேவையான கலோரி பற்றாக்குறையின் அளவு, தனிநபரின் தற்போதைய எடை, வயது, பாலினம், செயல்பாட்டு நிலை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உங்கள் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் பசியின்றி இருக்க உதவும்.
ஆனால், சர்க்கரை பானங்கள், வறுத்த உணவுகள் போன்ற அதிக கலோரி மற்றும் குறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுகள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்.
தினசரி உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்தும், தீவிர கார்டியோ உடற்பயிற்சிகள் மூலமும் அதிக கலோரிகளை எரிக்கலாம்.