உங்கள் ரிடைர்மென்ட் வாழ்க்கை குறித்து பிளான் செய்வதற்கு சில டிப்ஸ்
பாதுகாப்பான நிம்மதியான ரிடைர்மென்ட் வாழ்க்கைக்கான, திறவுகோல் முன்கூட்டியே திட்டமிடுவதாகும். நீங்கள், தற்போது, இன்னும் ரிடைர்மென்ட்டிற்கு காலமும் நேரமும் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் காலம் வேகமாக ஓடி விடும். ஒருநாள் நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அப்போது பதட்டமடையாமல், கூலாக நிலைமையை சமாளிக்க, இப்போதிருந்தே பிளான் செய்வது தான் நல்லது. அதற்காகவே நிபுணர்கள் தரும் சில டிப்ஸ் இதோ: ஓய்வூதியத் திட்டத்தை வகுத்து, அதை பின்பற்றுங்கள்: ரிடைர்மென்ட்டிற்கு பிறகு, நீங்கள் விரும்பும் வாழ்க்கைமுறை, நீங்கள் எதிர்பார்க்கும் செலவுகள், போன்ற ஓய்வு கால திட்டங்களை குறித்து, முன்னரே தீர்மானிக்கவும். அதை வைத்து, உங்களுடைய தற்போதைய நிதி நிலைமையின் அடிப்படையில், ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை தொடங்குங்கள்.
இன்றே மருத்துவ காப்பீடு செய்யவும்
விரைவில் முதலீட்டை தொடங்குங்கள்: எவ்வளவு விரைவாகச் சேமிக்கத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு காலம் உங்கள் முதலீடுகள் வளரும். உங்கள் ஓய்வூதியத்திற்காக ஒரு தனி கணக்கில் முதலீடு செய்யுங்கள். முதலீடுகள் குறித்த அறிவுரைகளுக்கு நிதி ஆலோசகரை அணுகவும். அதிகம் சம்பாதிக்கும்போது, அதிக முதலீடு செய்யுங்கள்: நீங்கள் மாத வருமானத்தில் இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும், உங்கள் நிதி நிலைமை உயரும் போது, உங்கள் ஓய்வூதிய முதலீட்டு அளவையும் அதிகரிக்கவும். அதனால் எதிர்காலத்தில் பணத்தை பற்றி கவலை இன்றி இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை காப்பீடு செய்யுங்கள்: வயதாகும்போது பலவிதமான உடல்நலப் பிரச்சினைகள் வரும் என்பது நிதர்சனம். அதனால், இன்றே, மருத்துவ காப்பீடு எடுப்பது நல்லது. மருத்துவ அவசரநிலைகளின் போது, கட்டணங்களை பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு, இது உதவும்.