பணிநீக்கத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள சில வழிகள்!
தற்போது உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார நிலைமையில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அனேகர் இந்த திடீர் பொருளாதார முடிவை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்காக சில டிப்ஸ் இதோ: அவசர கால நிதி: தற்போதைய சூழ்நிலையில், பணிநீக்கம் என்பது சாத்தியமானது எனக்கருதி, அவசர கால நிதியை ஒதுக்கி வைக்கலாம். மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை உங்கள் செலவினங்களை ஈடுசெய்ய அவசர நிதி போதுமானதாக இருக்க வேண்டும். நிலையான வருமானத்திற்கான வழியை தேர்ந்தெடுக்கும் வரை, இந்த அவசர நிதி போதுமானதாக இருக்க வேண்டும் திறமைகளை மேம்படுத்தி கொள்ளுங்கள்: பொருளாதார நெருக்கடி அல்லாத காலத்திலும், உங்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்ளுங்கள். அதுவே உங்களை எப்போதும் திடீர் பணிநீக்கத்திலிருந்து காக்கும்.
தொடர்பு வட்டமும், செல்ப் பிராண்டிங்கும் அவசியம்
தொடர்பு வட்டத்தை வளர்த்து கொள்ளுங்கள்: வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி, நீங்கள் நல்ல தொடர்புகளை வைத்திருந்தால், இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், அது உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் ஒரு வேலை பணி நீக்கம் செய்யப்பட்டாலும், வேறு ஒரு பணியை தேடவும் இந்த தொடர்பு வட்டம் உதவும். சுய-விளம்பரம்(செல்ப் பிராண்டிங்): உங்களை, நீங்களே சுயமாக விளம்பரம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். சந்தை நிலவரத்துக்கு தகுந்தது போல, உங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு, அதை உங்கள் தொடர்புகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். linkedin போன்ற வலைத்தளங்களில், உங்களது சுயவிவரத்தை புதிப்பித்து கொள்ள வேண்டும். உங்கள் சாதனைகளை பட்டியலிடுவதன் மூலம், உங்கள் வேலை வாய்ப்பு பிரகாசமாகும்.