மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான வீட்டு வைத்திய டிப்ஸ்
முழங்கால் வலி என்பது முதியவர்கள் மட்டுமல்ல, தற்போது 40-களில் இருப்பவர்களுக்கு கூட இருக்கிறது. அது ஒரு அடிப்படை நோயின் விளைவாக இலையென்றாலும், தசைநார் சிதைவு அல்லது கிழிந்த குருத்தெலும்பு, அதிகப்படியான உடல் செயல்பாடு, மூட்டில் ஏற்படும் காயங்கள் போன்றவையால் ஏற்படுகிறது. முழங்கால் வலியை குணப்படுத்த பல மருந்துகள் இருந்தாலும், இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களையும் அவ்வப்போது முயற்சி செய்யலாம். முழங்கால் வலிக்கு பயனுள்ள சில இயற்கை வைத்தியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இஞ்சி: அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அல்சர் எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிய இஞ்சி, மூட்டுவலி அல்லது தசைப்பிடிப்பால் ஏற்படும் முழங்கால் வலிக்கு சிறந்த மருந்தாகும். துருவிய இஞ்சியை, தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், வலியில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்
எலுமிச்சை: அதில் உள்ள சிட்ரிக் அமிலம், சில வகையான ஆர்தரைடிஸ் வலிகளை ஏற்படுத்தும் யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை தோல்களை வெதுவெதுப்பான எள் எண்ணெயில் தோய்த்து, பருத்தி துணியில் சுற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள், முழங்கால் வலியுடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயை, கற்பூர எண்ணெயுடன் கலந்து, உங்கள் முழங்காலில் மசாஜ் செய்யலாம். மஞ்சள்:மஞ்சளில் உள்ள குர்குமின், அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது, இது வீக்கம் மற்றும் மூட்டு வலியை ஆற்றும். 10 நிமிடங்களுக்கு மஞ்சள் மற்றும் அரைத்த இஞ்சியுடன் தண்ணீரை கொதிக்க வைக்கவும். வடிகட்டி, தேன் சேர்த்து, சூடாக பருகவும்.