Page Loader
உலக சிறுநீரக தினம் 2023: ஆரோக்கியமான சிறுநீரகம், உடல் இயக்கத்திற்கு மிக முக்கியம்
இன்று உலக சிறுநீரக தினம்; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்க

உலக சிறுநீரக தினம் 2023: ஆரோக்கியமான சிறுநீரகம், உடல் இயக்கத்திற்கு மிக முக்கியம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 09, 2023
09:13 am

செய்தி முன்னோட்டம்

ஆண்டுதோறும், மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன், உலகம் முழுவதும் 'உலக சிறுநீரக தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்று, (மார்ச் 9) உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. இது, முதன்முதலில், 2006 இல், சர்வதேச சிறுநீரகவியல் சங்கம் (ISN) மற்றும் சர்வதேச சிறுநீரக அறக்கட்டளைகள் (IFKF) ஆகியவற்றால் துவங்கப்பட்டது. இந்நாளில், சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் வாழ்வில் சிறுநீரக நோய்களின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். நீரழிவு நோய்க்கான முதன்மை காரணிகளாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. சிறுநீரகத்தின் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடலுக்கான ஆரோக்கியம் ஆகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஏன் முக்கியம் என்பதை மேலும் காண்க:

சிறுநீரக ஆரோக்கியம்

ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ரத்த சோகையை தடுக்கிறது

ஆரோக்கியமான சிறுநீரகம், உடலில் உள்ள திரவம் மற்றும் சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்களின் சமநிலையை நிர்வாகிக்கிறது. புரதச் சிதைவின் போது உற்பத்தியாகும் நச்சுகள், அதிகப்படியான உப்புகள் மற்றும் யூரியா போன்ற நச்சு கழிவுகளை உள்ளிட்டவகைளை சிறுநீரகம் நீக்குகிறது ரத்த அழுத்தத்தை சீராக்க, சிறுநீரகம், ரெனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. அது, ரத்த நாளங்களை, சுருக்கி, விரிவுபடுத்துவதன் மூலம், ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. சிறுநீரகங்கள், எரித்ரோபொய்டின் மற்றும் கால்சிட்ரியால் உள்ளிட்ட பல முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. சிறுநீரகங்கள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் ரத்த சோகையை தடுக்கிறது. சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான அமிலங்களை அகற்றுவதன் மூலம் உடலின் அமில-அடிப்படை சமநிலையை சீராக்க உதவுகிறது.