மருத்துவம்: உறுப்பு தானம் குறித்து உலவும் ஆதாரமில்லா கட்டுக்கதைகள்
உறுப்பு தானம், என்பது ஒரு நபர் வாழும் போது அல்லது இறந்த பிறகு, ஆரோக்கியமான, மாற்று உறுப்புகளை தானம் செய்யும் ஒரு உன்னதமான செயல். உறுப்பு தானத்தைச் சுற்றி பல கட்டுக்கதைகள் இன்றும் நிலவி வருவதால், இந்த உறுப்பு தானத்தை செய்ய, பலர் தயக்கம் காட்டுகின்றனர். அப்படி ஆதாரமில்லாத சில கட்டுக்கதைகள் இதோ: யார் வேண்டுமானாலும் உறுப்பு தானம் செய்யலாம்: தவறு, அனைவராலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாது. நடைமுறையில் உள்ள பல்வேறு மருத்துவக் கட்டுப்பாடுகள், அனைவரின் உறுப்புகளையும் தானமாக ஏற்றுக்கொள்ளாது. உதாரணமாக, இதயத் துடிப்பு இல்லாததால், முற்றிலும் இறந்தவர்களிடமிருந்து இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை மருத்துவர்கள் ஏற்பதில்லை. அதோடு உங்கள் வயதும் கணக்கில் கொள்ளப்படும்.
உறுப்பு தானம் மதத்திற்கு எதிரானது அல்ல
உறுப்பு தானம் உடலை சிதைக்கிறது: முறையான அறுவை சிகிச்சை மூலம் ஒருவரின் உடலில் இருந்து உறுப்புகள் கவனமாக அகற்றப்படுகின்றன. எனவே, உடல் சிதைக்கப்படாது. இறந்தவர் உடலில் இருந்து பெறப்படும் உறுப்புகளுக்கு மாற்றாக, போலி உறுப்புகள் பொருத்தப்பட்டு, பழைய நிலைமைக்கே உடல் மாற்றி தரப்படும். உறுப்பு தானத்திற்கு, கட்டணம் வசூலிக்கப்படும்: உறுப்பு தானம் செய்பவரின் குடும்பத்திடம் ஒரு பைசா கூட வசூலிக்கப்படுவதில்லை. உயிரைக் காப்பாற்றுவதற்கான இறுதி மருத்துவ செயல்முறைகளுக்கு மட்டுமே கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.மாறாக, உறுப்பை தானமாக பெறுபவர், கட்டணத்தை ஏற்பார். உறுப்புதானம் மதத்திற்கு எதிரானது: அனைத்து முக்கிய மதங்களும், உறுப்பு தானத்தை அனுமதிக்கின்றன. மேலும் அது தனிநபர் விருப்பத்திற்கு சம்மந்தப்பட்டது. இது கருணை மற்றும் இரக்கத்தின் செயலாக கருதப்படுவதால், அனைத்து மதத்தவரும் இதை ஊக்குவிக்கிறார்கள்.