
இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகள்
செய்தி முன்னோட்டம்
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் சதவிகிதம் சற்று குறைவு தான். 2022ம் ஆண்டு வெளியான பாலின சமநிலை அறிக்கையில், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களில் பங்களிப்பைக் கொண்ட பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது இந்தியா.
இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் தாங்கள் பணிக்கு செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதை முழுவதுமாக பெண்களால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடிவதில்லை.
இந்தியாவில் ஒரு பெண் பணிக்கு சென்றாலும் சரி, செல்லவில்லை என்றாலும் சரி, அந்தப் பெண்ணின் குடும்பத்தின், குடும்ப உறுப்பினர்களின் முக்கியமாக கணவருடைய கருத்தின் தாக்கல் அதில் அதிம் இருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் குறித்த தகவல்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.
இந்தியா
பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகள்:
பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பது அந்தக் குடும்பத்தின் நிதி நிலையைப் பொறுத்தே அமைகிறது. அதிக சம்பளம் பெறும் கணவர்கள் இருக்கும் குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதில்லை.
இப்படியான சூழ்நிலையே தற்போது வரை இருந்து வருகிறது. தற்போது கிராமப்புறங்களில் இதே நிலையிலே நீடித்து வரும் நிலையில், நகர்புறங்களில் நிலைமை சற்று மாறியிருக்கிறது.
நகர்புறங்களில், ஒரு பெண்ணுடைய கணவரின் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க அவர் வேலைக்குச் செல்லும் வாய்ப்புகளும் அதிகரிப்பதாக புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதிக சம்பளம் பெறும் ஆண்கள், படித்த பெண்களையே திருமணம் செய்கிறார்கள். எனவே, தங்களுடைய கணவருக்கு நிகராக தானும் வேவைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் பெண்களிடையே அதிகரிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.
இந்தியா
கணவரின் தாய்மார்களும் ஒரு காரணம்:
கணவரின் சம்பளத்தைத் தவிர்த்து, பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகளாக கணவரின் தாய்மார்களும் இருக்கிறார்கள்.
ஆம், ஒரு பெண்ணுடைய கணவரின் தாய் பணிக்கு செல்லும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அது அவர்களையும் பணிக்கு செல்ல உந்துகிறது.
பணிபுரியும் கணவரின் தாயைக் கொண்ட பெண்கள் தாங்களும் பணிக்குச் செல்லவே விரும்புகிறார்கள். இது கிராமப்புறங்களில் 50% ஆகவும், நகர்புறங்களில் 70% ஆகவும் இருக்கிறது.
இதுதவிர, திருமணமும் ஒரு பெண் பணிக்கு செல்லும் வாய்ப்புகளை அதிகரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கூறியதைப் போல ஒரு குடும்பத்தின் நிதிநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.