ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தற்போது இருக்கும், மில்லினியல்கள், நவநாகரீக உறவு மற்றும் டேட்டிங் என பல உறவுமுறை சொற்களை பயன்படுத்தி கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்றைய இளைஞர்கள், கமிட்மென்ட் பயம், அட்ஜஸ்ட் செய்வதில் உள்ள பிரச்சனைகள், சுதந்திரம் இழப்பது போன்ற காரணங்களால் திருமணத்தை தாமதப்படுத்தி வருகின்றனர். தங்கள் வசதிக்கேற்ப உறவுமுறைகளை தேர்ந்தெடுக்கும் இன்றைய தலைமுறையினர் அறிமுகம் செய்தது தான் வார இறுதி திருமணங்கள். இந்தவகை திருமணங்கள் தற்போது ஜப்பான் நாட்டில் பிரபலமாகி வருகிறது. வார இறுதி திருமணம் என்றால், தம்பதிகள், ஒரே வீட்டில் வசிப்பார்கள்.என்றாலும், வார இறுதி நாட்களில் மட்டுமே, ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவார்கள்.மற்ற வார நாட்களில் தனித்தனியாக, தங்கள் சொந்த விதிமுறைகளின்படி இருப்பார்கள். அவர்களின் தனிப்பட்ட காரணங்கள், வேலை மற்றும் சுதந்திரமான வாழ்க்கைமுறை காரணமாக இந்த திருமணமுறையை தேர்ந்தெடுக்கின்றனர்.
வார இறுதி திருமணங்களில் புரிதலும் தோழைமையும் குறைவாகவே இருக்கும்
பரபரப்பான வார வேலைகள் உள்ள தம்பதிகளுக்கு இது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அவர்கள் தங்கள் துணையுடன் நேரம் செலவழிக்க, தங்கள் வேலையின் நேரத்தை சமரசம் செய்ய வேண்டியதில்லை. இது குறைவான சண்டைகளுக்கு வழிவகுக்கிறது. ஏனெனில் நீங்கள் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைவு, அதனால் சண்டையிடுவதும் குறைவு. வார இறுதி திருமணம் பல நன்மைகளுடன் வந்தாலும், சில தீமைகளும் உள்ளன. நீங்கள் ஒருவரோடு ஒருவர் குறைந்த நேரத்தை செலவிடுவதால், புரிதலும், தோழமையும் குறைவாகவே இருக்கும். உங்கள் துணையுடன் நீங்கள் நேரம் செலவிட விரும்பி, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனால், மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். லாங் டிஸ்டன்ஸ் உறவில் இருக்கும் போது, வாராவாரம், உங்கள் துணையை சந்திக்க போகும், பயண செலவுகளும் அதிகரிக்கலாம்.