தலைமுடிக்கு தேவையான சில அத்தியாவசிய மூலிகை பொருட்கள்
ஆரோக்கியம்: உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே உங்கள் தலைமுடிக்கும் அதிக கவனிப்பு தேவை. ஆல்கஹால், பாராபென்ஸ் மற்றும் சல்பேட்டுகள் நிறைந்த முடி பராமரிப்புப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவதால், உங்கள் தலைமுடியின் இயற்கையான ஈரப்பதம் மற்றும் பளபளப்பு குறைந்து, அது உயிரற்றதாகவும், மந்தமாகவும் மாறுகிறது. எனவே, உங்கள் முடிக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களை இப்போது பார்க்கலாம். வேம்பு அதிக ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் இருப்பதால், இளநரை வருவதை வேம்பு தடுக்க உதவுவதோடு, அது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தீங்குகளிலிருந்து முடியை பாதுகாக்கிறது. மேலும், வேம்பில் இருக்கும் இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக செயல்பட வல்லது.
பிரிங்ராஜ்
எண்ணெயாகக் கிடைக்கும் பிரிங்ராஜ், முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு முக்கிய மூலிகையாகும். முடியை வலுப்படுத்தி மென்மையாக்கும் தன்மை கொண்ட பிரிங்ராஜ், மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் இழந்த முடியை மீண்டும் வளர வைக்க உதவும். பிராமி எண்ணெய் பிராமி இலைகள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தையும் ஆற்றலையும் வழங்கி முடி உதிர்வைக் குறைக்க உதவக்கூடியது. நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இவை பொடுகை நீக்கி, உச்சந்தலையில் இருந்து முடிக்கு பலம் அளிக்கிறது. சீயக்காய் எந்தவொரு முடி பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் மிகவும் நம்பகமான பாரம்பரிய மூலிகை சீயக்காயாகும். வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சீயக்காய், முடியை பளபளப்பாக வைத்திருப்பதுடன் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.