
பெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள்
செய்தி முன்னோட்டம்
இன்றைய குழந்தைகள், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகள், வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு துணைக்கு, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகள் வேறு! இதை வேலைக்கு செல்லும் பெற்றோர்களும், 'தொல்லை மிச்சம்' என ஊக்கப்படுத்துகிறார்கள். அதிலும், இப்போது பரவி வரும் விதவிதமான காய்ச்சலும் ஒரு காரணியாகிறது.
குழந்தைகளும், சுறுசுறுப்பான வெளி விளையாட்டுகளை விரும்பாமல், உட்கார்ந்தே விளையாடும் விளையாட்டுகளைதான் தேர்வு செய்கிறார்கள். அது, அவர்கள் உடலில் பல எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். அதை சில பெற்றோர்கள், கோவிட் காலகட்டத்திற்கு பிறகு உணர்ந்து இருப்பார்கள்.
வெளிவிளையாட்டுகள் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!
வெளியில் விளையாடுவதால், உடலின் மோட்டார் திறன்கள், சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் வலிமை ஆகியவற்றை வளர்ப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
குழந்தை வளர்ப்பு
வெளி விளையாட்டுகள், குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது
குழந்தைகள் வெளியில் விளையாடும்போது, அவர்கள் சில ரிஸ்க்கான முடிவுகளை எடுக்கவும், அதனால் ஏற்படும், தடைகளை கடக்கவும் வாய்ப்புள்ளது. அது அவர்களின் நம்பிக்கையையும், சுயமரியாதையையும் அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு குழந்தை, வெற்றிகரமாக மரத்தில் ஏறிய பிறகு, சாதனை உணர்வையும், தன்நம்பிக்கையையும் உணரலாம்.
அக்கம்பக்கத்தினரோடு குழந்தைகள் கூடி விளையாடும் போது, தங்களின் செயல்கள், மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணருவார்கள். இது அவர்கள் சமூக திறனை வளர்க்க உதவுகிறது. கருது வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதையும் தருகிறது.
ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதற்கும், மோதல்களைத் தீர்க்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை அறியவும், வெளி விளையாட்டுகள் அவர்களுக்கு உதவும்.