'உங்களை நீங்களே காதலியுங்கள்' என்ற புதுமொழிக்கேற்ப வாழும் இரண்டு புரட்சி பெண்கள்
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மந்தீப் கவுர் என்பவருக்கு 2012-ஆம் ஆண்டு, திருமணம் ஆனது. நன்றாக போய் கொண்டிருந்த திருமண வாழ்க்கை, அவர் உடலில் ஏற்பட்ட மாற்றத்தினால் விவாகரத்து வரை சென்றது.
ஆம், திருமணம் ஆன சில வருடங்களிலேயே, மந்தீப்பிற்கு, தாடியும், மீசையும் வளர ஆரம்பித்தது. இதனால், தம்பதிகள் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே, அவர்கள் பிரிய நேர்ந்தது.
முதலில் காரணம் புரியாமல், விரக்திக்கு ஆளான மந்தீப், அவர் மதத்தை சார்ந்த கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தாராம். அங்கிருக்கும் குருவின் ஆசியால், சுயத்தை உணர்ந்த மந்தீப், தன்னை தானே நேசிக்கவும், தன்னுடைய குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் பழகிக்கொண்டாராம்.
ஆரம்ப காலத்தில், தன்னை தானே வற்புறுத்து கொண்ட மந்தீப், இப்போது தன்னை அரவணைக்க பழகிக்கொண்டதாக கூறுகிறார்.
பெண்கள் நலம்
தன்னுடைய குறைகளை ஏற்றுக்கொண்டு புரட்சி பெண்ணாக வலம் வரும், ஹர்னாம் கவுர்
இங்கிலாந்தில், ஹர்னாம் கவுர் என்ற பெண்ணிற்கும் இதே போன்ற பிரச்னை தான். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் PCOS , பெண்களின் ஹார்மோன் அளவை பாதிக்கும் ஒரு நிலை. அதில் ஏற்படும் மாற்றம் காரணமாக, ஹர்னாம் கவுருக்கு, பருவம் வந்த வயதில், அதாவது 11 வயதிலிருந்தே, முகத்தில் முடி வளர்ந்து வருகிறது.
ஆரம்பத்தில், தன்னுடைய தோற்றத்தை வெறுத்த அவர், பார்லருக்கு சென்று, முகத்தில் வாக்ஸிங், ஷேவிங் செய்து வந்துள்ளார். அவரின் தோற்றத்தினால், கேலிக்கும் கிண்டலுக்கும் தாம் ஆளானதாகவும் ஹர்னாம் தெரிவித்தார். பள்ளி கல்வியை முடித்த பிறகு, அவர், தன்னை ஏற்றுக்கொண்டதையும், முகத்திற்கு வாக்ஸிங் செய்வதை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு இப்போது வயது 31. இவர் TED-ல் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக உள்ளார்.