தேசிய ஊட்டச்சத்து வாரத்தை 'Glance ஃபுட் ஃபேருடன்' கொண்டாடுங்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance, தேசிய ஊட்டச்சத்து வாரத்தை கொண்டாடுவதற்காக "Glance ஃபுட் ஃபேர்" என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 10 வரை நடத்தப்பட இருக்கும் இந்த பரப்புரை, இந்திய உணவுகளில் பாரம்பரியமாகவே இருக்கும் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்க உள்ளது. 2023ஆம் ஆண்டை ஐநா சபை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
இந்திய உணவு வகைகளின் பெருமையை பறைசாற்றும் Glance ஃபுட் ஃபேர்
இந்தியா மற்றும் உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த உணவுப் பழக்க வழக்கங்களுக்கும், பழங்கால தானியங்களுக்கும் மரியாதை செலுத்துவதற்காக இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, இந்திய உணவு வகைகளின் பெருமையை பறைசாற்றும் கதைகளையும் தகவல்களையும், Glance ஃபுட் ஃபேரின் மூலம், ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance வழங்கவுள்ளது. உணவு குறிப்புகள், ஊட்டச்சத்து குறிப்புகள் மட்டுமல்லாமல், இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் உணவு தகவல்களும் இந்த பரப்புரையில் வழங்கப்படவுள்ளது.
Glance ஃபுட் ஃபேரின் "இந்திய உணவு வரைபடம்"
மேலும், இந்த நிகழ்வின் போது சமூக வலைதள பிரபலங்களின் உணவு முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். "இந்தியாவின் உணவு வரைபடம்" என்ற ஒரு ஆன்லைன் சுற்றுப்பயணமும் இந்த பரப்புரைக்காக திட்டமிடப்பட்டுள்ளது. "இந்தியாவின் உணவு வரைபடம்" என்பது இந்த ஃபுட் ஃபேரின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள உணவு மரபுகள் மற்றும் பரமப்பரியங்களை பயனர்களின் கண்களுக்கு முன் காட்டும் ஒரு ஆன்லைன் சுற்றுப்பயணமாக இது இருக்கும்.
தற்போது ஏழு இந்திய மொழிகளில்
வட மாநிலங்களின் காரசார உணவுகளில் இருந்து, தென் மாநிலங்களில் பாரம்பரியமாக அறியப்பட்ட இனிப்புகள் வரை இந்தியாவின் அனைத்து கலாசார உணவுகளும் இந்த பரப்புரையில் காட்சிப்படுத்தப்படும். ஏழு இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம், நாட்டின் மூலைமுடுக்கில் உள்ளவர்களுக்கும் இந்த தகவல்கள் கிடைப்பதை "Glance ஃபுட் ஃபேர்" உறுதி செய்கிறது. எனவே, தேசிய ஊட்டச்சத்து வாரத்தை கொண்டாடும் வகையில் Glance ஸ்மார்ட் லாக் ஸ்கிரீனுடன் இணைந்து உணர்வுகளுக்கு விருந்தளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியம் ஆக்குங்கள்.
Glance-ஐ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Glance என்பது 2019ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனம் Glance, Roposo மற்றும் Nostra உள்ளிட்ட சில டிஜிட்டல் தளங்களை இயக்குகிறது. ஸ்மார்ட் போன்களின் லாக் ஸ்கிரீன்கள் இணையத்தை பயன்படுத்தும் விதத்தை மாற்றியமைத்திருக்கும் Glance, ஆப்ஸ்களை டவுன்லோட் செய்யும் தேவையை முற்றிலுமாக நீக்கியுள்ளது. 400 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் தற்போது Glanceஇன் அடுத்த தலைமுறை இணைய அனுபவத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தகவலுக்கு glance.com, roposo.com மற்றும் inmobi.com ஆகிய தளங்களுக்கு செல்லவும்.