திருமண விழாக்களில் ஆரோக்கியமாக உணவை சாப்பிடுவது சாத்தியமா? முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்
திருமணங்களில் கலந்துகொள்வது எப்போதுமே கொண்டாட்டம் தான். ஆனால் நாம் டயட்டில் இருக்கும்போதும், நமக்குப் பிடித்த உணவுகள் பந்தியில் பரிமாறப்படும் போதும் அப்படி இருக்காது. அதன் காரணமாக, ஒன்று அது போன்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பீர்கள் அல்லது உங்கள் டயட் இலக்குகளை மீறிவிடுவீர்கள். இதுபோன்ற சிக்கலான சமயங்களில், எவ்வாறு இரண்டையும் சமாளிப்பது என நிபுணர்கள் குறிப்புகள் சொல்லித்தருகிறார்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள்: ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளும்போது, தாராளமாக கிடைக்கும் உணவை, நாம் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க முடியாது. அதனால், பகல் நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, இரவில் உங்கள் கலோரிகளை பற்றி கவலைப்படாமல் உண்ணலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிறிய பகுதிகளாக பிரித்து உண்ணலாம்
சிறந்த உணவுகளை தேர்வு செய்யுங்கள்: திருமணம் நிகழ்ச்சிகளிலும் தற்போது ஆரோக்கியமான உணவை வழங்குகிறார்கள். பொரித்த உணவுகளுக்கு பதிலாக, வறுக்கப்பட்ட அல்லது வேகவைத்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். காய்கறிகள், சூப்கள் மற்றும் சாலட்களில் கவனம் செலுத்துங்கள். சிறிய பகுதிகளாக பிரித்து சாப்பிடுங்கள்: சிறிய அளவில் சாப்பிடுவது உங்கள் சாப்பாட்டின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகளை தவிர்க்க உதவுகிறது. நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கலாம்: திருமணங்களில், ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை தவிர்க்க, தண்ணீரை குடிக்கலாம்! ஆம், நாள் முழுவதும் தண்ணீரை பருகுவதால், உடலில் நீர்ச்சத்து குறையாமலும், நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும் உதவும். ஆனால், காக்டெயில், மாக்டெயில்கள் அல்லது ஐஸ்கிரீம் ஷேக்குகளுக்குப் பதிலாக எலுமிச்சைப் பழ சாறு அல்லது காபியைத் தேர்ந்தெடுக்கலாம்.