பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள்
பெண்களுக்கு, மாதந்தோறும் வரும் பீரியட்ஸ் என்பது, அவர்களின் உடலையும், மனதையும் ஒருசேர வதைக்கும் நேரம் எனலாம். பலருக்கு, இந்த மாதவிடாய் காலத்தில், தசைப்பிடிப்புகளும், தாள முடியாத வயிற்று வலிகளும் நேரலாம். 'பீரியட்ஸ் கிராம்ப்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாதவிடாய் பிடிப்புகள் போது, குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி, கீழ் முதுகு மற்றும் தொடையில் வலி ஆகியவை இருக்கும். இதை சமாளிக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய சில பானங்கள் இதோ உங்களுக்காக: ஊட்டச்சத்து நிரம்பிய பச்சை ஸ்மூத்தி: பச்சை இலைகளும், காய்கறிகளும் சேர்த்த இந்த பானம், உங்கள் உடலுக்கு நீரேற்றத்தை வழங்கும். அதனால், உங்கள் வலி குறையும். இரும்பு மற்றும் மெக்னீசியத்தை நிறைந்த பாதாம் பாலில், கீரை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்த ஸ்மூத்தியை பருகலாம்.
அழற்சி எதிர்ப்பு சக்தி நிரம்பிய இஞ்சி டீ
இஞ்சி டீ:இஞ்சியில் உள்ள 'ஜிஞ்சரால்' எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியது. இது மாதவிடாய் பிடிப்பை குறைக்க உதவுகிறது. இஞ்சி டீ, உங்கள் உடலுக்கு இயற்கையான வெப்பத்தை அளிக்கிறது. உங்கள் கருப்பைக்கு பலத்தை அளிக்கிறது. அதனால் மாதவிடாய் தொடர்புடைய வீக்கம் மற்றும் குமட்டலைக் குறைகிறது. கெமோமில் டீ:கெமோமில் டீயில் கிளைசின் மற்றும் ஹிப்புரேட் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை தசைப்பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இந்த டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மாதவிடாய் வலியை ஆற்றும். மலர் சுவை, உங்கள் மனநிலையையும் மேம்படுத்துகிறது. அன்னாசி பழச்சாறு:அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்ற நொதி, மாதவிடாய் வலியைக் குறைத்து, தசைகளை தளர்த்துகிறது. இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீரியட்ஸுடன் தொடர்புடைய வீக்கத்தையும் குறைக்கின்றன.