Page Loader
வெறுங்காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
வெறுங்காலுடன் நடக்கும் பழக்கம்

வெறுங்காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

எழுதியவர் Arul Jothe
Jun 05, 2023
11:55 am

செய்தி முன்னோட்டம்

உடற்பயிற்சியை போலவே வெறும் காலில் நடப்பது ஒரு வகையான அக்குபஞ்சர் சிகிச்சை ஆகும். காலணிகள் இல்லாமல் நடக்க முயற்சிப்பவர்கள் அல்லது நடப்பவர்களாக இருந்தால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு பாதமும் 26 எலும்புகள், 33 மூட்டுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தசைகள், தசைநார்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட ஒரு சிக்கலான அமைப்பாகும். வெறுங்காலுடன் தரையில் நடப்பது உங்கள் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் போன்ற பல நன்மைகளை அளிக்கிறது. கால் வலி மற்றும் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. தரையில் வெறும் காலில் நடப்பது உடலில் இயற்கையான மின் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

Walking in Bare Foots 

வெறுங்காலுடன் நடக்கும் பழக்கம்

மேலும் இவ்வாறு வெறுங்காலுடன் நடப்பது காலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறைதல், தூக்கத்தை மேம்படுதல், நோய் எதிர்ப்பு சக்தி, மன அழுத்தம் குறைதல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது கால்கள், கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வலுப்படுத்துகிறது. இதற்கு முன் வெறுங்காலுடன் நடக்க முயற்சி செய்யாத ஆரம்பநிலையாளர்கள் மெதுவாக சில நிமிடங்களுக்குப் பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் கால்களுக்கு வசதியாக இருக்க முதலில் ஈரமான புல் போன்ற ஈரமான பரப்பில் நடக்க முயற்சிக்க வேண்டும். இது நமது உடல், மன மற்றும் நடத்தை மாற்றங்கள், தூக்கம், ஹார்மோன்கள், உடல் வெப்பநிலை, உணர்ச்சிகள் போன்ற முக்கியமான விஷயங்களைக் கவனித்துக்கொள்கிறது.