ஆன்மீகத்தின் பாதையை தேர்ந்தெடுக்க போகிறீர்களா? முதலில் இந்த கட்டுக்கதைகளை நம்புவதை நிறுத்துங்கள்
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை ஆன்மீகம் மாற்றியுள்ளது.
நம்பிக்கைகளை மீண்டும் நிலைநிறுத்துவது முதல் மக்களை அமைதிப்படுத்துவது வரை, ஆன்மிகம் என்பது, பல நூறு ஆண்டுகளாக, நம்பிக்கையின் ஒளிக்கற்றையாக, பலராலும் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சில நாத்திகவாதிகளாலும், சில அரைகுறை ஆன்மீகவாதிகளாலும், ஆன்மிகம் பற்றிய பல தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அப்படி ஆன்மீகத்தை சுற்றி உலவும் கட்டுக்கதைகள் சிலவற்றை பற்றி இங்கே காண்போம்
கட்டுக்கதை 1: ஆன்மீகம், மதம் சார்ந்தது: இல்லை. ஆன்மீகத்தில், நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட வழிபாடு முறையையோ, கொள்கை கோட்பாடுகளையோ பின்பற்றப்போவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட மதத்தையோ அல்லது ஒரு பிரிவினருடன் தொடர்புடைய எதையும் நம்பபோவதில்லை. அதற்கு பதிலாக, இது உங்களுக்குள் தேடி, உங்கள் உள்ளார்ந்த பரிபூரணத்தை ஏற்றுக்கொள்வதாகும்.
ஆன்மீகம்
ஆன்மீகம் அனைத்து வயதினருக்கும் பொருந்தும்
கட்டுக்கதை 2: ஆன்மீகம் என்பது வயதானவர்களுக்கானது: தவறு. ஆன்மிகம் என்பது வயது, பாலினம், ஜாதி, மதம், தொழில் அல்லது பிற பாகுபாடான அடிப்படைகளை பொறுத்து வருவதில்லை. இளைஞராக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் நம் வாழ்வில் உள்ள பல கேள்விகளுக்கான பதில்களை தேடுகிறோம். அதற்கு ஆன்மீகம் நமக்கு உதவும்.
கட்டுக்கதை 3: ஆன்மீகத்தில், நீங்கள் சிற்றின்பங்களை துறக்க வேண்டும்
நிஜ உலகில், பொருள் இன்பங்களை அடைவதற்கு, ஆன்மிகம் உங்களுக்கு உதவும். உங்கள் மனதை கூர்மையாக்கி, கவனச்சிதறல்களை நீக்கி, உங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது.
கட்டுக்கதை 4: ஆன்மீகவாதிகள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பார்கள்
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களை விட்டு துக்கமும், துன்பமும் விலகாது. மாறாக, அதை, ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை அடைகிறார்கள்.