Loading...
மழைக்காலத்தில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக சேமிப்பது எப்படி? செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
வரும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுக்க கொண்டாடப்படவுள்ளது

மழைக்காலத்தில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக சேமிப்பது எப்படி? செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
06:08 pm

செய்தி முன்னோட்டம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், தீபாவளி பண்டிகைக்கு வாங்கிய பட்டாசுகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் மழைநீரில் இருந்து நமத்துப் போகாமல் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது பலருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. நனைந்த பட்டாசுகள் சரிவர வெடிக்காது என்பதுடன், அவற்றை உலர்த்த முயற்சிப்பது ஆபத்தாகவும் முடியக்கூடும். வரும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுக்க கொண்டாடப்படவுள்ளது. இதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போதே பட்டாசு வாங்க துவங்கி விட்டனர். இந்த பாட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வைப்பது? இதோ டிப்ஸ்

சேமிக்கும் வழிமுறைகள்

பட்டாசுகளை பாதுகாப்பாக சேமிக்கும் வழிமுறைகள்

பட்டாசுகளை அட்டைப் பெட்டியில் இருந்து பிரிக்காமல், அப்படியே காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்.

ஈரப்பதத்தை உறிஞ்ச பெரிய பெட்டிக்குள் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம் (இவை நேரடியாக வெடிகள் மீது படக்கூடாது).

தரை மற்றும் சுவர்களில் ஈரப்பதம் இருக்கும் என்பதால், பீரோ அல்லது மேஜை போன்ற உயரமான இடங்களில் வைக்க வேண்டும்.

சமையலறை, குளியலறை, பால்கனி, மொட்டை மாடி மற்றும் கேஸ் சிலிண்டர்/மின்சாதனங்கள் அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

செய்தித்தாள்களைச் சுற்றி வைப்பது தீப்பற்றும் அபாயத்தை அதிகரிக்கும்.

பயன்பாட்டு விதிகள்

பாதுகாப்பான பயன்பாட்டு விதிகள்

மழைநீர் பட்டாசுக்குள் சென்றுவிட்டால், அதை எக்காரணம் கொண்டும் ஹேர் டிரையர், ஹீட்டர் அல்லது நேரடி வெயிலில் காயவைக்க முயலக்கூடாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பட்டாசுகளைத் திறந்தவெளியில் மட்டுமே வெடிக்க வேண்டும்; குழந்தைகள் அருகில் பெரியவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

பக்கத்தில் ஒரு வாளி பக்கெட் தண்ணீர் மற்றும் முதலுதவிப் பெட்டியைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வெடிக்காத பட்டாசுகளை உடனடியாக அருகில் சென்று தொடுவதையோ அல்லது மீண்டும் பற்றவைப்பதையோ தவிர்க்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே தரமான பட்டாசுகளை வாங்கி, இந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது தீபாவளி பண்டிகையைப் பாதுகாப்பானதாக மாற்றும்.

ADVERTISEMENT