Page Loader
"டைவர்ஸ் ஆகிருச்சு..காச திருப்பி குடு" என போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்ட மணப்பெண்
முறிந்து போன கல்யாணத்திற்கு, போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்ட மணப்பெண்!

"டைவர்ஸ் ஆகிருச்சு..காச திருப்பி குடு" என போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்ட மணப்பெண்

எழுதியவர் Venkatalakshmi V
May 09, 2023
11:50 am

செய்தி முன்னோட்டம்

திருமணம் என்றதும், முதலில் புக் செய்வது போட்டோக்ராபரைதான். அந்த அளவிற்கு போட்டோகிராபர்களுக்கும், வீடியோகிராபர்களுக்கும் தான் டிமாண்ட் அதிகம். தற்போது கான்செப்ட் போட்டோகிராபி மிகவும் பிரபலமாகி வரும் நேரத்தில், ஒரு மணப்பெண், திருமணம் முறிந்ததும், அந்த போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ள வினோத சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆனால் அது இந்தியாவில் இல்லை என்பது ஒரு ஆறுதல். சாட் மெசேஜின்படி, அந்த பெண் "உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா எனத்தெரியவில்லை. டர்பனில் நடைபெற்ற எனது திருமண விழாவை நீங்கள் அழகாக படம் பிடித்திருந்தீர்கள். ஆனால், எதிர்பாராத விதமாக, அந்த திருமணம் நீண்டநாள் நீடிக்கவில்லை" என்றார். தொடர்ந்து திருமணம் நீடிக்காத காரணத்தால், அவர் மொத்த பணத்தையும் திருப்பி தரவேண்டும் எனவும் வாதிட்டார் அந்த பெண்மணி.

ட்விட்டர் அஞ்சல்

வைரலான ட்வீட்