இரும்பு சத்து நிறைந்த வெல்லத்தை உங்கள் அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்ளலாம்?
செய்தி முன்னோட்டம்
இயற்கையான சர்க்கரையாக கருதப்படும் வெல்லம் இரும்புசத்து நிறைந்தது.
அதை தினசரி உட்கொள்வதால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
வெல்லத்தின் செரிமான நன்மைகள் நன்கு அறியப்பட்டவை. செரிமான நொதிகளை மேம்படுத்துவது முதல் செரிமானத்தை எளிதாக்குவது வரை, பல நல்ல விஷயங்கள் உள்ளன.
வெல்லம் இயற்கையான ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மாதவிடாய் வலியையும் நீக்குகிறது.
இந்த 'ஸ்வீட்' உணவு பொருளை உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு சில சுவையான சுவாரசியமான வழிகள் இங்கே தரப்பட்டு உள்ளன.
அவற்றை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
card 2
வெல்லம் டீ/காபி
நீங்கள் தினசரி அருந்தும் பால், டீ, காபி போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்தவும்.
சர்க்கரை அளவை விட குறைவான அளவு வெல்லம் போதும், உங்கள் ட்ரிங் -ஐ சுவையூட்ட. ஆயுர்வேத மருத்துவம், குளிர்காலத்தை வெல்ல ஏற்ற ஒரு வரப்பிரசாதமாக கருதுவதால், இது இந்த பருவநிலை மாற்றத்திற்கு சரியான தேர்வாக இருக்கும்.
மேலும் கெமிக்கல்கள் கலந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு, ஆரோக்கியமான மற்றும் இயற்கையான மாற்றவும் இந்த வெல்லம்.
இதனால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் பிற நாள்பட்ட சுகாதார நிலைகளைத் தடுக்கப்படுகிறது.
card 3
வெல்லம் சேர்க்கப்பட்ட அல்வா அல்லது பாயசம்
அல்வாவில், சர்க்கரைக்கு மிகப்பெரிய மாற்றாக வெல்லம் சேர்க்கலாம்.
இது உங்கள் உணவில் இரும்பின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் , ஹல்வாவுக்கு தனித்துவமான, நுட்பமான சுவையையும் வழங்குகிறது.
ஆனால், அதற்கு கணிசமான அளவு நெய் தேவைப்படுவதால், அதை அளவிடும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கூடுதலாக, அதிக நன்மைகளைப் பெற, திராட்சை, பாதாம் போன்ற உலர் பழங்களை வெல்லம் அல்வாவுடன் சேர்க்கலாம்.
வெல்லம் சேர்க்கப்பட்ட பாயாசங்களை விசேஷ நாட்களில் தேர்வு செய்து செய்யலாம்.
ஜவ்வரிசி, அரிசி, பாசிபருப்பு என பலவகையான பாயாசங்களில் வெல்லம் சேர்த்து செய்யும் போது சுவை அமோகமாக இருக்கும்.
card 4
வெல்லம் கலந்த குடிநீர்
வெல்லம் சாப்பிடுவதற்கான மற்றுமொரு எளிய வழி இது.
காலையில், வெதுவெதுப்பான நீரில் ஒரு சிறிய டீஸ்பூன் வெல்லம் கலக்கவும்.
இது பித்த ஓட்டத்தை மேம்படுத்தி, அதன் இயற்கையான இனிப்புடன், உடலின் அமிலத்தன்மையை சீராக்கும்.
மேலும், குளிர்காலத்தில் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான வெல்லம் கலந்த தண்ணீரைக் குடிப்பது சாதாரண உடல் வெப்பநிலையை மீட்டெடுக்கவும், வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும் உதவும்.
இதே போல கோடை காலத்தில் பானகம் குடிப்பதை வாடிக்கையாக வைத்து கொள்ளலாம்.
card 5
வெல்லம் மற்றும் பருப்புகள்
வெல்லம் மற்றும் பருப்பு, அதாவது வேர்க்கடலை/நிலக்கடலை சேர்த்து அனைவரும் உண்டிருப்பார்கள்.
அதன் பெயர் மட்டும் ஊருக்கு ஊர் மாறுமே தவிர, அதன் ஆரோக்கிய நன்மைகளில் மாற்றம் இல்லை.
வேர்க்கடலையில் இருக்கும் புரதம் மற்றும் கார்போஹைட்ரெட்ஸ் மற்றும் வெல்லத்தில் அதிகப்படியாக இரும்பு சத்தும், கால்ஷியமும் உங்கள் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை தருகிறது.
இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். வெல்லப்பாகு எடுத்து, அதனுடன் வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து போட்டு, ஒரு தட்டில் பரப்பி, ஆறியவுடன் வெட்டி எடுத்து சாப்பிடலாம்.
இன்னொரு மாற்றாக, வெல்லமும், போட்டுக்கடலையும் கலந்தும் சாப்பிடலாம். அல்லது வறுத்த எள் சேர்த்து சாப்பிடலாம். சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் தயார்!