NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளை அதிகரிக்கும் நீரிழிவு நோய்; தற்காத்துக் கொள்வது எப்படி?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளை அதிகரிக்கும் நீரிழிவு நோய்; தற்காத்துக் கொள்வது எப்படி?
    எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளை அதிகரிக்கும் நீரிழிவு நோய்

    எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளை அதிகரிக்கும் நீரிழிவு நோய்; தற்காத்துக் கொள்வது எப்படி?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 21, 2025
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    பொதுவாக இதய நோய்களுடன் தொடர்புடைய நீரிழிவு நோய், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    சுகாதார நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில், ஹைப்பர் கிளைசீமியா அல்லது உயர் இரத்த சர்க்கரை அளவுகள் எலும்புகளை பலவீனப்படுத்துகின்றன என்றும் அவை மூட்டு வலியை ஏற்படுத்துகின்றன என்றும் எச்சரிக்கின்றனர்.

    மேலும் நீரிழிவு நோய் இவற்றை குணப்படுத்துவதையும் மெதுவாக்குகின்றன. கீல்வாதம் மற்றும் உறைந்த தோள்பட்டை போன்ற நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

    நீரிழிவு எலும்பு உருவாக்கம் மற்றும் முறிவுக்கு இடையிலான சமநிலையை சீர்குலைத்து, எலும்பு அடர்த்தி குறைவதற்கும் எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

    இது மூட்டு வீக்கம், விறைப்பு மற்றும் இயக்கம் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது, இதனால் அன்றாட பணிகள் சவாலானவையாக மாறும் நிலை ஏற்படலாம்.

    எடை

    எடை அதிகரிப்பால் அதிகரிக்கும் கீல்வாதம்

    எலும்பு முறிவுகள் மற்றும் மூட்டு காயங்களிலிருந்து குணமடைவதை மோசமான இரத்த ஓட்டம் மேலும் தாமதப்படுத்துகிறது.

    கூடுதலாக, நீரிழிவு நோயில் ஒரு பொதுவான பிரச்சினையான அதிகப்படியான எடை, குறிப்பாக முழங்கால்களில் கீல்வாதத்தை அதிகரிக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் இணைப்பு திசுக்கள் பலவீனமடைவதால் உறைந்த தோள்பட்டை மற்றும் தசைநார் காயங்களுக்கும் ஆளாகிறார்கள்.

    எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை பராமரிக்க, பால் பொருட்கள், இலை கீரைகள், கொட்டைகள் மற்றும் மீன் உள்ளிட்ட கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    அதே நேரத்தில் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    உடற்பயிற்சி

    எலும்புகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள்

    நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற எடை தாங்கும் உடற்பயிற்சிகள் மூட்டு நெகிழ்வுத்தன்மையையும் எலும்பு வலிமையையும் அதிகரிக்கும்.

    புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்துதல், ஆரோக்கியமான எடையை பராமரிப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களும் மிக முக்கியமானவையாகும்.

    கடுமையான நிகழ்வுகளுக்கு, ரோபோடிக் முழங்கால் மாற்று மற்றும் ஆர்த்ரோஸ்கோபிக் நடைமுறைகள் போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் பயனுள்ள தீர்வுகளை வழங்குகின்றன.

    நீரிழிவு தொடர்பான எலும்பு மற்றும் மூட்டு சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கு வழக்கமான எலும்பு ஸ்கேன்கள் மற்றும் மூட்டு பரிசோதனைகள் அவசியமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீரிழிவு நோய்
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்

    சமீபத்திய

    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி

    நீரிழிவு நோய்

    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட்
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று விருதுநகர்
    கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல் கொரோனா
    மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல் கொரோனா

    ஆரோக்கியம்

    ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிச்சம்பழமா? அத்திப்பழமா? ஒரு விரிவான ஊட்டச்சத்து ஒப்பீடு ஆரோக்கியமான உணவு
    புனேவில் பரவும் புதிய நரம்பியல் நோய்- குய்லின்-பார் சிண்ட்ரோம்; அப்படியென்றால் என்ன? ஆரோக்கிய குறிப்புகள்
    புரோட்டீன் பவுடர்கள் அதிகம் உட்கொள்வது நல்லதா கெட்டதா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் ஊட்டச்சத்து
    நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்; இதை கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள் புற்றுநோய்

    உடல் ஆரோக்கியம்

    மன்மோகன் சிங் மரணத்திற்கு காரணமான சுவாச நோய்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் சுவாச பிரச்சனைகள்
    மன்மோகன் சிங் மரணத்திற்கு காரணமான சுவாச நோய்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் சுவாச பிரச்சனைகள்
    குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் குளிர்கால பராமரிப்பு
    வேகவைத்த முட்டை vs ஆம்லெட் : எதில் அதிக நன்மைகள் உள்ளன? ஒரு ஊட்டச்சத்து ஒப்பீடு ஆரோக்கியமான உணவு

    உடல் நலம்

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு: ஆரோக்கிய நன்மைகளுடன் கூடிய குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பர் உணவு ஆரோக்கியம்
    குளிர்காலத்தில் வயதான ஆண்களிடையே அதிகரிக்கும் புரோஸ்டேட் ஆரோக்கிய கவலைகள்; தடுப்பது எப்படி? குளிர்கால பராமரிப்பு
    நீங்கள் குளிர்காலத்தில் சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்கும் நபரா? இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் குளிர்கால பராமரிப்பு
    குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குளிர்கால பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025