வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம்
உடல் ஒவ்வாமையினாலும், தனி நபர் விருப்பதினாலும், பலர் தற்போது வீகன் டயட் முறையை கடைபிடிக்கின்றனர். சைவ உணவு வகைகளில், இந்த வீகன் மற்றொரு வகை. பால், மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை, உணவில் சேர்த்துக்கொள்ளாதவர்களை 'வீகன்' என அழைப்பார்கள். இருப்பினும், அது எவ்வளவு பிரபலமாக வளர்ந்து வருகிறதோ, அதே அளவு அதை சுற்றி பல தவறான கருத்துகளும், சந்தேகங்களும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. அவற்றை பற்றி உணவு ஆலோசகர்கள் விளக்குகிறார்கள். வீகன் உணவு மிகவும் விலை உயர்ந்தது: தானியங்கள், பருப்பு வகைகள், அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்ற பல அடிப்படை மற்றும் பிரதான சைவ உணவு வகைகள் விலைமதிப்பானவை அல்ல. பதப்படுத்தப்பட்ட அல்லது, உயர்நிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும்போது விலை அதிகரிக்கும்.
வீகன் உணவினால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காது
வீகன் உணவு உண்பவர்களுக்கு போதுமான புரதம் கிடைப்பதில்லை: நீங்கள் வீகன் டயட்டிற்கு மாறும்போது, ஓட்ஸ், பருப்பு, டோஃபு, நட்ஸ்கள் மற்றும் விதைகள் போன்ற பல தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்து, புரதங்களை பெறலாம். கீரை, ப்ரோக்கோலி, மற்றும் காளான்கள் போன்ற காய்கறிகள் கூட, புரதசத்தில் நிறைந்தவை. சைவம் மற்றும் வீகன் உணவு உண்பவராக இருப்பது மிகவும் சவாலானது: எந்த ஒரு அடிப்படை வாழ்க்கை முறை மாற்றமும், முதலில் கடினமானதாகத்தான் இருக்கும். பல சைவ உணவுகள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல, சுவையிலும் அபாரமாகவே இருக்கும். வீகன் உணவு உண்பதால் ஆரோக்கிய நன்மைகள் கிடையாது: இது தவறான கருத்தாகும். எடை இழப்பு, இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பது மற்றும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளை, சைவ டயட் வழங்குகிறது.