நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
நமது உடல், பருவ நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.
அதனால்தான் பருவத்தின் ஒவ்வொரு மாற்றத்திலும், வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
கூடுதலாக, இந்த நேரத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக குழந்தைகள்.
இதை தவிர்க்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இந்த பருவ மாற்றத்தின் போது சத்தான சில உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.
அவை என்ன என்பதை இதோ உங்களுக்காக தருகிறோம்.
card 2
இளநீர்
இளநீரில் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதில் அதிக அளவு லாரிக் அமிலம் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளுடன் நிறைந்துள்ளது.
இதன் மூலம், இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றி, தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்தும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
கூடுதலாக, தேங்காய் நீரில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. அதனால், உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.
card 3
கருமிளகு
கருப்பு மிளகு, வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது.
இது தொற்றுநோய்களைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, தொற்று ஏற்பட்டிருப்பின், உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
பருவம் மாறும் போது ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றை போக்கவும் இது ஒரு நல்ல வீட்டு வைத்தியம்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, வெளிப்புற நுண்ணுயிரிகளை உங்கள் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
card 4
மஞ்சள்
பருவகால நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளைத் தடுக்கும் ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் மஞ்சள் ஒன்றாகும்.
ஆயுர்வேதத்தின் முக்கிய மூலப்பொருளான இந்த மஞ்சள், அதன் சக்திவாய்ந்த ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளுடன், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இந்த மஞ்சளில் உள்ள குர்குமின், பல்வேறு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியமாக இருக்க தினசரி மஞ்சள் பாலை பருகலாம்.
card 5
பருவகால பழங்கள்
பருவகாலத்தால் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க மற்றொரு வழி, பருவகால பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது.
குளிர்காலத்தை வரவேற்க நாம் தயாராகும்போது, ஆரஞ்சு, திராட்சை, கிவி, ஆப்பிள் மற்றும் ப்ளூபெர்ரிகளை அதிகமாக உக்கொள்ள துவங்குங்கள்.
ஏனெனில் அவை குளிரையம், அதனால் ஏற்படும் நோய் தொற்றுகளையும் சமாளிக்க தேவையான ஊட்டச்சத்துக்களுடன் உள்ளன.
இந்த சுவையான பழங்களில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும், உங்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.
அந்தந்த பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு பருவ நிலை பழங்களையே தேர்வு செய்து உண்ண வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.