பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும்
செய்தி முன்னோட்டம்
காக்ஸ் பஜார் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க சுந்தர்பன்ஸ் மற்றும் பழங்கால பாகர்ஹாட் நகரம் வரை, பங்களாதேஷில் சுற்றிபார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.
எனினும், ஒரு சுமூகமான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை உறுதி செய்ய, அந்த நாட்டின் சமூக விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
பங்களாதேஷில் நீங்கள் சுற்றுலா செல்லும்பொது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான சுற்றுலாத் தவறுகளின் பயனுள்ள பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு எந்த விதமான அவமரியாதையையும் தவிர்க்கவும்:
பங்களாதேஷில் அதிகமாக முஸ்லிம்கள் வசிப்பதால், அவர்கள் மதத்தை அவமதிக்கும் விதத்தில் ஒருபோதும் நடக்கக்கூடாது. குறிப்பாக, நோன்பு மாதமான ரமலான் மாதத்தில், பொது இடங்களில் சாப்பிடுவது அநாகரீகமாக கருதப்படுகிறது. அதனால், அந்த மாதத்தில் சாலையோர உணவகங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டிருக்கும்.
card 2
வங்கதேசத்தில் நீங்கள் பொதுவெளியில் செய்யக்கூடாதவை
PDA அல்லது பொதுவெளியில் அன்பை பொழிவதை தவிர்க்கவும்: இந்தியாவை போலவே, பொதுவெளியில், பாசத்தை வெளிப்படையாகக் காட்டுவது அநாகரீகமாகக் கருதப்படுகிறது. அதனால், மற்றவர்களுக்கு முன்னால் முத்தமிடுவதையோ, கட்டிப்பிடிப்பதையோ தவிர்ப்பது நல்லது.
உடலை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய வேண்டாம்: பெரும்பான்மையான இஸ்லாமிய மதத்தவர்கள், பெண்கள் உடலை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிவதை ஏற்றுக்கொள்வதில்லை. அதோடு, அந்த ஊரின் தட்பவெட்டப்ப நிலைக்கு ஏற்ற ஆடைகள், உள்ளூர் சந்தைகளிலேயே கிடைக்கிறது.
அரசியல் கூட்டங்களில் இருந்து விலகி இருங்கள்: வங்கதேசத்தில், அரசியல் கூட்டங்களின் போது, போராட்டங்களும் நிகழும் என்பதால், இதுபோன்ற அரசியல் கூட்டம் நாடாகும் போது விலகி இருத்தல், உங்களுக்கு பாதுகாப்பு.
கைகுலுக்கி வாழ்த்த வேண்டாம்: வங்காளதேச மக்கள் பெரும்பாலும் தங்கள் உரையாடல்களை "சலாம்" அல்லது "அதாப்" போன்ற வாழ்த்துக்களுடன் தொடங்குவார்கள்.