Page Loader
சுற்றுலா: உலக நாடுகள் சிலவற்றில் தவறாக கருதப்படும், செய்யக்கூடாத சில பொதுவான பழக்கவழக்கங்கள்
உலக நாடுகள் சிலவற்றில் செய்யக்கூடாத சில பொதுவான பழக்கவழக்கங்கள்

சுற்றுலா: உலக நாடுகள் சிலவற்றில் தவறாக கருதப்படும், செய்யக்கூடாத சில பொதுவான பழக்கவழக்கங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 16, 2023
09:54 am

செய்தி முன்னோட்டம்

அன்றாட வாழ்க்கையில், நீங்கள் செய்யும் சில பொதுவான செய்கைகளும், பழக்கவழக்கங்களும், உலக நாடுகள் சிலவற்றில், ஏற்றுக்கொள்ள கூடிய செய்கை அல்ல என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? தம்ப்ஸ்-அப் குறியீடு, அன்னியர்களை பார்த்தால் புன்னகைப்பது போன்ற பொதுவான விஷயங்கள் கூட சில நாடுகளில், சில பகுதிகளில் முரட்டுத்தனமாகவும், அவமானகரமானதாகவும், கருதப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? எனவே, உங்கள் விடுமுறைக்கு நீங்கள் செல்லும்போது, ​​உள்ளூர் பழக்கவழக்கங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். அபத்தமாக கருதப்படும் சில பழக்கவழக்கங்களில் பட்டியல் இதோ: அமைதிக்கான குறியீடு: அமைதிக்கான அடையாளமாகிய, இரண்டு விரல்களை உயர்த்தி காட்டுவது, குறிப்பாக, உங்கள் உள்ளங்கை, உங்கள் முகத்தை நோக்கி திருப்பி வைப்பது, பிரிட்டன் நாட்டில் தவறாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சைகை, அவமானகரமாக கருதப்படலாம்.

சுற்றுலா

அவமரியாதையின் குறியீடாக கருதப்படும் தம்ப்ஸ் அப்

தம்ப்ஸ்-அப்: பல மேற்கத்திய கலாச்சாரங்களில் 'தம்ப்ஸ் அப்' சைகை, ஒப்புதல் அல்லது ஆதரவின் சின்னமாக கருதப்படுகிறது. இருப்பினும், மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், இது முரட்டுத்தனமாக கருதப்படுகிறது. குறிப்பாக LGBTQ சமூகத்தில், அவமரியாதையின் அடையாளமாக உணரப்படலாம். உணவை தட்டில் மிச்சம் வைக்காமல் உண்ணுவது: நம் நாட்டில், தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பது நல்ல பழக்கமாக கருதப்பட்டாலும், சீனா, ரஷ்யா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உங்கள் தட்டில் சிறிதளவு உணவை விட்டுச் செல்வது, விருந்தோம்பல் மற்றும் பெருந்தன்மைக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. சப்புகொட்டுவது: ஆசிய கலாச்சாரங்களில், உணவை சப்புக்கொட்டி உண்பது, உணவை ரசிப்பதற்கான அடையாளமாக பார்க்கப்பட்டாலும், மேற்கத்திய கலாச்சாரங்களில், உணவருந்தும் போது அமைதியாக உண்பதை நாகரீக செயலாக கருதுகின்றனர்.