இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதோடு, பிறப்பு விகிதாச்சாரமும் குறைந்து வருவதாகவும், அதற்கு காரணம், தற்போது இருக்கும் இளம் தலைமுறையினருக்கு காதலிக்க நேரமில்லை எனவும் கருதுகிறார்கள். இதைத் தவிர்க்கும் பொருட்டு, சீன கல்லூரிகள், 1 வாரம், வசந்த கால விடுமுறையாக அறிவித்துள்ளனர். இந்த விடுமுறை நாட்களில், மாணவர்கள் காதலிக்க உபயோகமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து. அது சரி, காதலில் இருப்பவர்கள் காதலிக்கலாம், நாங்க எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் என திரிபவர்களுக்கு, குறிப்புகளை எழுதுதல், தனிப்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்தல் மற்றும் அவர்களின் பயணங்களின் வீடியோக்களை படம்பிடித்தல் போன்ற வீட்டுப்பாடங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அரசின் கொள்கையால் குறைந்த மக்கள் தொகை
சீனாவில் உள்ள 9 கல்லூரிகள் இது போன்ற 'காதல்' விடுமுறை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்லூரிகளின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை, மாணவர்கள் "இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், வசந்த கால விடுமுறையை அனுபவிப்பதன் மூலம், அன்பை காதலை உணர ஊக்குவிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், அவர்கள் நாட்டில் நிலவும், குறைந்த பிறப்பு விகிதத்தை அதிகரிக்கலாம் என்றாலும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளிக்குமாறு சீன அரசாங்கம் கேட்டுள்ளது. 1980 - 2015 க்கு இடையில் விதிக்கப்பட்ட 'நாம் இருவர், நமக்கு ஒருவர்' கொள்கையால் தான், சீனாவிற்கு இந்த நிலைமை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த காலவரிசையைப் பகிரவும்