புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance, இந்த புரட்டாசி மாதத்தை உங்களுக்கு மேலும் சிறப்பானதாக மாற்றவுள்ளது. ஆம், புரட்டாசி என்பது இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பலருக்கும், தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில், கோவிலில் பூஜைகளும், வீட்டில் தளிகைகளையும் தாண்டி பலருக்கும் மனதில் தோன்றுவது, இந்த மாதம் முழுவதும் அசைவம் உண்ணக்கூடாது என்பது தான். அதற்கு ஆன்மிகம் தாண்டி, அறிவியல் காரணங்களும் கூறப்பட்டாலும், பல நான்-வெஜ் பிரியர்களுக்கு இந்த மாதம் முழுவதும், அசைவம் உண்ணாமல் எப்படி இருப்பது என்பது பெரிய கவலையாகவே இருக்கும். கவலை வேண்டாம்! சைவம் மற்றும் அசைவ பிரியர்களுக்கு என, 'புரட்டாசி ஸ்பெஷல்' தொகுப்பை இந்த மாதம் முழுவதும் Glance உடன் கொண்டாடுங்கள்.
என்ன எதிர்பார்க்கலாம்?
முதலில் புரட்டாசி மாதத்தில் ஸ்பெஷல் உணவுகளான, புரட்டாசி தளிகை, அக்காரவடிசல், முருங்கை கீரை பொரியல் போன்ற உணவுகளை செய்யும் முறையும், அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பும் நீங்கள் எதிர்பார்க்கலாம். அதேபோல, அசைவ பிரியர்களுக்கு என அதே ருசியில் இருக்க கூடிய சில சைவ உணவுகளையும், அவற்றின் செய்முறையும் உங்களுக்கு தருகிறோம். அப்போது இது அசைவ பிரியர்களுக்கு மட்டுமா என யோசிக்க வேண்டாம். சைவ பிரியர்கள் ட்ரை செய்து பார்க்க சில வித்தியாசமான உணவுகளும் இங்கே வழங்கவுள்ளோம். செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த திருவிழா, ஒரு மாதம் முழுவதும், அதாவது அக்டோபர் 17 வரை நடைபெறும். தினமும் இரண்டு ஸ்பெஷல் உணவு குறிப்புகள் என கொண்டாடுங்கள்.
Glance-ஐ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Glance என்பது 2019ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனம் Glance, Roposo மற்றும் Nostra உள்ளிட்ட சில டிஜிட்டல் தளங்களை இயக்குகிறது. ஸ்மார்ட் போன்களின் லாக் ஸ்கிரீன்கள் இணையத்தை பயன்படுத்தும் விதத்தை மாற்றியமைத்திருக்கும் Glance, ஆப்ஸ்களை டவுன்லோட் செய்யும் தேவையை முற்றிலுமாக நீக்கியுள்ளது. 400 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் தற்போது Glanceஇன் அடுத்த தலைமுறை இணைய அனுபவத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தகவலுக்கு glance.com, roposo.com மற்றும் inmobi.com ஆகிய தளங்களுக்கு செல்லவும்.