LOADING...
மலத்தில் இரத்தம் வந்தால் மூலநோய் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்; மருத்துவர்கள் எச்சரிக்கை
மலத்தில் இரத்தம் வந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை

மலத்தில் இரத்தம் வந்தால் மூலநோய் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்; மருத்துவர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 14, 2025
05:10 pm

செய்தி முன்னோட்டம்

மலத்தில் இரத்தம் வருவதைக் கண்டால், பலர் பொதுவாக அதை மூலநோய் என்று கருதி அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால், மருத்துவர்கள் இந்த அனைத்துச் சமயங்களிலும் அது பாதிப்பில்லாத இரத்தப்போக்கு அல்ல என்றும், இது குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் இளம் வயதினரிடையே இந்தப் புற்றுநோய் அதிகரித்து வருவதால், அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அறிகுறிகள்

மூலநோய் vs புற்றுநோய் அறிகுறிகள்

மூலநோய் பொதுவாகப் பிரகாசமான சிவப்பு நிற இரத்தத்தை ஏற்படுத்தும், இது பெரும்பாலும் துடைத்தாலோ அல்லது மலம் கழித்த பின்னரோ காணப்படலாம். ஆனால், குடல் புற்றுநோயின் அறிகுறிகள் வேறுபடுகின்றன. மலத்துடன் கலந்த அடர்ந்த இரத்தம், கருப்பு அல்லது தார் போன்ற மலம் போன்றவை ஆகியவை எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

பிற அறிகுறிகள்

கவனிக்க வேண்டிய பிற முக்கியமான அறிகுறிகள்

தொடர்ச்சியான மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, மலம் குறுகி வருவது, அடிக்கடி வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப் பிடிப்புகள், காரணமின்றி எடை குறைதல், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நிரந்தர சோர்வு, மற்றும் மலம் கழித்த பிறகும் குடல் முழுமையாகக் காலியாகவில்லை என்ற உணர்வு ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டியப் பிற தீவிர அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் நுட்பமாகவும் படிப்படியாகவும் ஏற்படுவதால், பலர் மருத்துவ உதவியை நாடுவதற்குத் தாமதிக்கின்றனர் என்று டாக்டர் தபாஸ் குறிப்பிடுகிறார்.

Advertisement

சிகிச்சை

மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை

மலத்தில் இரத்தம் வருவது அல்லது குடல் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்தால், சுய-சிகிச்சை செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் உடல் பரிசோதனை, மலப் பரிசோதனைகள் மற்றும் கொலோனோஸ்கோபி போன்றச் சோதனைகளைப் பரிந்துரைக்கலாம். குடல் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றிச் சிகிச்சையளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, மலத்தில் இரத்தம் வருவதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது, ஏனெனில் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிவதே இந்தப் புற்றுநோயிலிருந்து காக்கும் வலிமையான பாதுகாப்பாகும்.

Advertisement