Page Loader
LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
LGBTQ மக்களுக்கான இரத்த தான விதிகள்

LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

இரத்த தானம் என்பது மற்றவர்களின் வாழ்வில், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்னலமற்ற செயலாகும். உயிர்க்காக்கும் ஓர் உன்னத செயலாகும். ஆனால் இந்தியாவில் இந்த உன்னத செயலில் பங்குபெற, தன்பாலின ஈர்ப்புடையவர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை. 2017 இல் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, அவர்கள் இரத்த தானம் செய்வதற்கான உரிமையை இன்னும் பெறவில்லை என்றே கூறவேண்டும். இந்நிலையில், உலகம் எங்கும், LGBTQ சமூக மக்களுக்கு, ரத்த தானம் செய்ய, என்னென்ன சட்டங்கள் உள்ளன என்பது குறித்த சிறு பார்வை: ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இரத்த தானக் கொள்கை 2020 இல் திருத்தப்பட்டது. அதன்படி, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (MSM) இப்போது இரத்த தானம் செய்ய முடியும்.

ரத்ததானம்

பாலியல் நோய் தொற்றின் அச்சம் காரணமாகவே பல நாடுகள் தடை விதிக்கின்றன

ஆனால் தானம் செய்வதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அவர்கள் தனித்திருக்க வேண்டும். இந்த புதிய சட்டம், ஜனவரி 31, 2021 முதல் அமலுக்கு வந்தது. ரஷ்யா: ரஷ்யா இத்தகைய சமூகத்தின் மீது இன்னும் கண்டிப்புடன் தான் செயல்படுகிறது. MSM சமூதாய மக்கள் அனைவருமே, ரத்ததானம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதி, திருநங்கைகளுக்கும் பொருந்தும். கனடா: கனடா நாட்டிலும், ரத்ததானம் செய்வதற்கு 3 மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்னால் வரை உடலுறவில் ஈடுபடக்கூடாது. இது LGBTQ சமூகத்தினர் அனைவருக்கும் பொருந்தும் விதி. பாலியல் தொடர்பான நோய் தொற்றுகளை தவிர்க்கவே இந்த விதி. நியூசிலாந்து: ஆஸ்திரேலியாவை போலவே இங்கும்,கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல், சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு, MSMகள் ரத்ததானம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.