LOADING...
பாட்டி காலத்து 'எள்ளு உருண்டை': கூந்தல் வளர்ச்சியை தூண்டும் அருமருந்து
கூந்தல் வளர்ச்சியை தூண்டும் அருமருந்து எள்ளு

பாட்டி காலத்து 'எள்ளு உருண்டை': கூந்தல் வளர்ச்சியை தூண்டும் அருமருந்து

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2026
06:38 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைதளங்களில் "ஒரே வாரத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்" என்ற ரீல்களுடன் இந்த டிரெண்ட் பிரபலமானது. உண்மையில், எள்ளில் உள்ள சத்துக்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானவை. முடி என்பது உடலுக்கு ஒரு Non-essential tissue. உடலில் சத்துக்கள் குறையும் போது, இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கே உடல் முக்கியத்துவம் கொடுக்கும்; முடிக்குத் தராது. எள்ளு உருண்டை சாப்பிடும்போது, அந்த சத்துக்களின் இருப்பு அதிகரித்து, முடிக்கும் சத்துக்கள் கிடைக்கின்றன. எள்ளில் உள்ள துத்தநாகம் முடி வேர்களை புதுப்பிக்கிறது. இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து வேர்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. இதிலுள்ள நல்ல கொழுப்புகள் தலையை வறட்சியின்றி வைத்திருக்கின்றன.

மாற்றங்கள்

எள்ளுருண்டை முடி வளர்ச்சியில் நீங்கள் காணும் மாற்றங்கள்

2-3 வாரங்களில்: தலையணையில் கொட்டும் முடியின் அளவு குறையும். 4-6 வாரங்களில்: முடியின் மென்மை மற்றும் பளபளப்பு அதிகரிக்கும். 6-10 வாரங்களில்: நெற்றிப் பகுதியில் சிறிய 'பேபி ஹேர்ஸ்' வளர்வதை நீங்கள் கவனிக்கலாம். இதிலுள்ள அதிகப்படியான கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். வைட்டமின் E மற்றும் துத்தநாகம் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக்கும். இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும், இரும்புச்சத்து உடனடி ஆற்றலுக்கும் உதவுகிறது. இது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் முடி கொட்டுதலுக்கு மட்டுமே பலன் தரும். மரபணு ரீதியான வழுக்கை அல்லது தைராய்டு பிரச்சினைகளுக்கு இது தீர்வாகாது என்பதையும் குறிப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Advertisement