உடல் ஆரோக்கியம்: ஆலிவ் எண்ணையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
ஆலிவ் எண்ணெய்யில், ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. மேலும் ஆலிவ் எண்ணையில், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. அதனால், தினசரி பயன்பாட்டுக்கு, ஆலிவ் எண்ணையை, குறிப்பாக, வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஆலிவ் பழங்களில் இருந்து பெறப்படும் இந்த ஆலிவ் எண்ணையில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, ஒமேகா-6 அமிலம், ஒமேகா-3 மற்றும் ஒலிக் அமிலம் நிறைந்துள்ளது. அந்த அமிலம், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. அதோடு, புற்று நோய் உண்டாக்கக்கூடிய மரபணுக்களில் பல நேர்மறை மாற்றங்களை உண்டாக்குகிறது ஆலிவ் எண்ணெய்.
ஆன்டி ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிரம்பிய ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணையில், ஆன்டி ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் E , வைட்டமின் k சத்துக்கள் உள்ளது. இது உங்கள் சரும பளபளப்பிற்கு உதவுகிறது. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. அதேபோல, எடை குறைப்புக்கும் உதவுகிறது. ஆலிவ் எண்ணையில் சமைப்பதால், அல்சைமர் நோய்க்கு காரணமான பீட்டா அமிலாய்டு சுரப்பி கட்டுக்குள் வைக்கப்படுகிறதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, டைப் 2 நீரழிவு நோயை தடுக்கவும் உதவுகிறது. இப்படி பல மருத்துவ குணங்கள் நிரம்பிய ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.