
மண்பாண்ட சமையலின் நன்மைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு
செய்தி முன்னோட்டம்
நம் முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வாழ்க்கை முறையில் பல நன்மைகள் உண்டு. நவீன காலத்தில், அதையெல்லாம் முடிந்த வரை கடைபிடித்தால், நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.
உதாரணமாக, முன்னோர்கள் சமையலுக்கு மண்பண்டங்களை பயன்படுத்தினர். அதில் இருக்கும் பல நன்மைகளை இங்கே பட்டியிலிடப்பட்டுள்ளது. அவற்றை பார்த்து, நீங்களும் மண்பானை சமையலை துவங்குங்கள்.
உணவின் ஊட்டச்சத்தை தக்கவைக்க உதவுகிறது: மண்பானையில் சமைப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, அது சமைக்கப்படும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதாகும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மண் பானைகளில் இருக்கும் துளைகள் மூலமாக, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை ஒழுங்குபடுவதால், உணவின் ஊட்டச்சத்து 100% தக்க வைக்கப்படுகிறது.
அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கும்போது 13% வரை மட்டுமே தக்கவைத்துள்ளது.
மண் பானை
குறைந்த அளவு எண்ணையே தேவைப்படும் மண்பானை சமையல்
உணவில் அதிக தாதுக்களை சேர்க்கிறது: மண்பாண்டங்களில், நமது ஆரோக்கியத்திற்கு தேவைப்படும், கால்சியம், தாமிரம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற 16 வகையான கனிமங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அதில் உணவுகளை சமைப்பதன் மூலம், இந்த தாதுக்களின் கூடுதல் நன்மைகளையும், சிறந்த ஆரோக்கியத்தையும் பெறலாம்.
அமில மதிப்பை நடுநிலையாக்குகிறது: இன்றையகால கட்டத்தில், பலரும் சந்திக்கும் அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. மண் பானையில் உள்ள கார தன்மை உணவின் அமில மதிப்பை சமன் செய்கிறது. மேலும், வயிற்றில் எரிச்சல், மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பல நோய்களிலிருந்து உங்களை காக்கிறது.
சமையலுக்கு குறைந்த எண்ணெய் தேவை: மண்பாண்டங்களில் சமைப்பதனால், குறைந்த அளவே எண்ணெய் தேவைப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு ஏற்றதாக அமைகிறது.