பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் ஈஸியாக கற்றுக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள்
பெற்றோர்களின் நடத்தையையும், பழக்க வழக்கங்களைம், குழந்தைகள் மிக ஈஸியாக கற்றுக்கொள்ளும். பிள்ளைகள் பெற்றோரின் நல்ல பழக்கங்களை எடுத்துக்கொள்வதோடு, கெட்ட பழக்கங்களையும் பின்பற்ற தொடங்குவார்கள். காரணம், அவர்களுக்கு சரி, தவறுக்கு வித்தியாசம் தெரியாது. அப்படி உங்களை பார்த்து, பிள்ளைகள் பின்பற்றும் சில கெட்ட பழக்கங்கள் என்னென்ன என தெரிந்துகொள்ளுங்கள். சுகாதாரமின்மை: பெற்றோராகிய நீங்கள், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தால், உங்கள் குழந்தையும் அதை பின்பற்றி, தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார். நீங்கள் சுத்தமாக, சுகாதராமாக இல்லாமல் இருந்தாலோ அல்லது விளையாடிய பிறகு கைகளைக் கழுவச் சொல்லாமலோ இருந்தால், அவர்களும் சுகாதாரம் முக்கியம் என்பதை உணர மாட்டார்கள்.
செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க பழக்க வேண்டும்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்: குழந்தைகள், தங்கள் பெற்றோர் என்ன சாப்பிடுகிறார்களோ, அதையே பின்பற்றுகிறார்கள். ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்குப் புரிய வைப்பது முக்கியம். குழந்தையை அடிப்பது: குழந்தைகள் முரட்டுத்தனமான நடத்தையை வெளிப்படுத்துகிறார்களா? அப்போது அது நிச்சயமாக, வீட்டில் இருந்து கற்றுக்கொள்ளபட்ட நடவடிக்கையாகவே இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளை கண்டிக்க, அடிக்கடி திட்டி, அடிப்பவர்களாக இருந்தால், அவர்கள் அதை சாதாரண நடத்தை என்று நம்பி, பின்பற்ற தொடங்குகிறார்கள். தவறு செய்தாலும், மன்னிப்பு கேட்காமல் இருப்பது: நீங்கள் தவறு இருந்தாலும் மன்னிப்பு கேட்காமல் இருக்கிறீர்களா? குழந்தைகள் அதே பழக்கத்தைக் கற்றுக்கொள்வதோடு, எதிர்காலத்தில் அதையே வெளிப்படுத்துவார்கள். மன்னிப்பு கேட்காமல் இருப்பது, அவர்களை அகங்காரம் மற்றும் திமிர்பிடித்தவராகவும் ஆக்கும்.