அடுத்த செய்திக் கட்டுரை

'பிடெக் பானி பூரி வாலி': இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, பானி பூரி கடையை நடத்தும் இளம்பெண்
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 09, 2023
12:22 pm
செய்தி முன்னோட்டம்
21 வயதான தப்சி உபாத்யாய், டெல்லியில் உள்ள இளம் தொழில்முனைவோர்கள் வட்டத்தில் மிக பிரபலம். பிடெக் பட்டப்படிப்பை முடித்தபிறகு, சொந்த தொழில் தொடங்க முடிவு செய்த உபாத்யாய், தேர்ந்தெடுத்தது பானி பூரி கடையை.
அவரின் சமீபத்திய வீடியோ ஒன்றை, @are_you_hungry007 என்ற இன்ஸ்ட்ராகிராம் பயனர் பகிர்ந்தும், அவரை பற்றி தெரிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தப்சி உபாத்யாய், பானி பூரி கடையை தொடங்கவேண்டும் என தேர்வு செய்ததும்,ஆரோக்கியமான உணவே அவரின் கொள்கையாக தேர்ந்தெடுத்தார்.
அதனால், அவர் 'AirFryer' மூலமாக, எண்ணெயில்லா பானிபூரிகளை, தானே தயார் செய்கிறார்.
இதுமட்டுமில்லாமல், இதேபோன்று, மற்ற சாட் உணவுகளையும் ஆரோக்கியமான முறையில் விற்பனை செய்யவேண்டும் என்பதே தனது வருங்கால திட்டமாக அவர் கூறுகிறார்.