Page Loader
டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 
டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 21, 2023
10:45 am

செய்தி முன்னோட்டம்

டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா. டிஜிட்டல் கடன் வழங்கும் துறையில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாதுகாப்பை தாங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறுகிறார் அவர். எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது தான் சரியான நடைமுறைகளைப் பின்பற்றி சரியான நபர்களுக்கு அவை கடன் வழங்கும். அப்படி இல்லாத பட்சத்தில், அவற்றில் நடவடிக்கையில் எந்தவித நெறிமுறைகளும் இருக்காது. இதனால் பாதிக்கப்படப்போவது வாடிக்கையாளர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

நிதி

டிஜிட்டல் கடன் என்னும் பொறி! 

எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் வங்கியல்லாத நிதி நிறுவனமாகவே கருத்தப்படும். இப்படியான நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்திருக்கும். டிஜிட்டலாக நாம் கடன் வாங்கும் போது, நாம் கடன் வாங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்திருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். மேலும், ஒரு கடன் வழங்கும் நிறுவனம் நம்மிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் கடன் வழங்குகிறது என்றால், அது கண்டிப்பாக ஒரு எலிப்பொறியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவை நம்முடைய தகவல்களை திருடவும், அதனைக் கொண்டு நம்மை மிரட்டி கடனை அதிக வட்டியுடன் திருப்பி வசூலிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, டிஜிட்டல் கடனைப் பொருத்தவரை நம் பாதுகாப்பு நம் கையில் தான்.