காண்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்? நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை
கண்பார்வை குறைபாடு காரணமாக, பெரிய கண்ணாடிகள் அணிபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் இந்த காண்டாக்ட் லென்ஸ். ஏற்கனவே லென்ஸ் அணிபவராக இருந்தாலும் சரி, புதிதாக லென்ஸ் அணிபவராக இருந்தாலும் சரி, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றை மீறும் போது உங்கள் லென்ஸ் பாதிப்படைவது மட்டுமின்றி, கண்பார்வையும் சில நேரங்களில் பாதிக்கப்படும். காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து குளிக்கவோ, நீந்தவோ கூடாது: நீங்கள் என்ன அவசரத்தில் இருந்தாலும், உங்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து குளிக்கவோ, நீந்தவோ கூடாது. தண்ணீரில் நுண்ணுயிரிகள் இருப்பதாகவும், லென்ஸ்கள் பஞ்சுபோன்றவையாக இருப்பதால் அவற்றை உறிஞ்சிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால், பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். இது தவிர, தண்ணீர் உங்கள் லென்ஸ்களின் வடிவத்தையும் மாற்றும்.
காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
மருந்துச் சீட்டு இல்லாமல் காண்டாக்ட் லென்ஸ்கள் வாங்க வேண்டாம்: பெரும்பாலான மக்கள் நவநாகரீகமாக தோற்றமளிக்க அல்லது தங்கள் கண்ணாடிகளை அகற்றுவதற்காக காண்டாக்ட் லென்ஸ்கள் (குறிப்பாக வண்ணமயமானவை) வாங்குகிறார்கள். எப்படியிருந்தாலும், கையில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் செய்யக்கூடாது. மருத்துவரிடம், உங்கள் பார்வைக்கு ஏற்ற பரிந்துரைத்து பெற்றபின், லென்ஸ் வாங்கவும். காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்து தூங்க வேண்டாம்: காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்து கொண்டு தூங்குவது, கண் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை 10 மடங்கு அதிகரிக்கிறது. இதனால் உங்கள் cornea பாதிக்கப்படும். கண்களை அடிக்கடி மற்றும் வேகமாக தேய்க்க வேண்டாம்: காண்டாக்ட் லென்ஸ்கள் சிறியதாகவும், மென்மையாகவும், பஞ்சுபோன்றதாகவும் இருந்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது உங்கள் கண்களைத் தேய்ப்பது, கண்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.